Will Smith | அம்மா வாயில் ரத்தம் ! அப்பாவை கொல்லும் எண்ணம் ! அனுபவத்தை பகிர்ந்த வில் ஸ்மித்!
”அன்றிலிருந்து நான் சாதித்த விருதுகள், நட்சத்திர அங்கீகாரம், கதாபாத்திரங்கள், சிரிப்புகள் எல்லாமே என் அம்மாவுக்காகத்தான்.”
ஹாலிவுட் திரைப்படங்களின் முன்னணி நடிகர் வில் ஸ்மித். வில்ஸ் மித் உலகம் முழுவதும் பிரபலமான நடிகர் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு மென் இன் பிளாக் திரைப்படம் மூலம் நன்கு பரீட்சியமானவர். பிரபல யூடியூப் ஓடிடி தளத்தில் ‘Best Shape of My Life’ என்ற பெயரில் தனது வாழ்க்கை அனுபவங்களை ஆவணப்படமாக வெளியிட்டிருந்தார். அதில் பல விஷயங்களை வெளிப்படையாக வில் ஸ்மித் பகிர்ந்திருந்தார். அது அவரது ரசிகர்களுக்கு வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘வில்’ என்ற தலைப்பிலான சுயசரிதை புத்தகத்தில் தனது தாய்க்கு நேர்ந்த அவலத்தை வெளிப்படையாக எழுதியுள்ளார் வில் ஸ்மித்.
View this post on Instagram
அதில் “எனக்கு 9 வயது இருக்கும். அப்பொழுது என் அப்பா, என் அம்மாவின் தலையின் ஒரு பகுதியில் குத்துவதை பார்த்தேன். அவர் அடித்ததால் என் அம்மா வாயிலிருந்து ரத்தமாக துப்பினார். அன்றிலிருந்து நான் சாதித்த விருதுகள், நட்சத்திர அங்கீகாரம் ,கதாபாத்திரங்கள், சிரிப்புகள் எல்லாமே என் அம்மாவுக்காகத்தான். இதன் வாயிலாகத்தான் அவங்ககிட்ட மன்னிப்பு கேட்க முடிவு செய்தேன். அன்னைக்கு நடந்த சம்பவம்தான் நான் யார்னு எனக்கு உணர்த்தியது.. அன்றைக்கு என்னால் அம்மாவுக்காக என் அப்பாவை எதிர்த்து நிர்க்க முடியவில்லை. அந்த குற்ற உணர்ச்சியால் நான் என்னை ஒரு கோழையாக உனர்ந்தேன். நீங்கள் என்னைப்பற்றி புரிந்துகொண்டது மென் இன் பிளாக் படத்தில் ஏலியனை அழிக்கும் வில்ஸ்மித் ஒரு ஸ்டார் என்று, ஆனால் என்னை நானே பாதுகாத்துக்கொள்ள உருவாக்கிய கட்டிடம் அந்த ஸ்டார் வேல்யூ.உலகத்திலிருந்து என்னை மறைக்க ஒரு கோழையை மறைக்க உருவாக்கியது. உண்மையில் பயத்திற்கு நாம் எந்த மாதிரி பதிலளிக்க விரும்புகிறோமோ அப்படியாகத்தான் மாறுகிறோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் என் அப்பா ஒரு குடிகாரர், அவர் செய்யும் கொடுமைகளால் பல சமயங்களில் அவரை கொன்று விடலாமா என்ற எண்ணம் கூட எனக்கு தோன்றியது " என்றும் வில் ஸ்மித் ஒரு மகனின் ஆதங்கத்தை வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
இந்த பிரச்சனையால் வில் ஸ்மித்தின் தாய் கரோலின் பிரைட் ஸ்மித் மற்றும் தந்தை வில்லார்ட் கரோல் ஸ்மித் பிரியவில்லை என்றாலும், கடந்த 2000-வது ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்றனர். அப்போது வில்ஸ்மித் டீன் ஏஜராக இருந்தார். மிகப்பெரிய ரசிகர்களை கொண்ட வில்ஸ் ஸ்மித் , தன் சிறு வயதில் தன் தாய்க்கு தந்தையால் நேர்ந்த வன்முறையை வெளிப்படையாக எழுதியிருப்பது அவர் மீதான மதிப்பை கூட்டியுள்ளது.
இவ்வளவு காலமாக தான் ஈட்டிய அனைத்தும் தன் அம்மாவின் நிறைவுக்காகத்தான் என வில்ஸ்மித் கூறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்க் மேன்சனுடன் இணைந்து வில்ஸ்மித் எழுதிய ‘வில்’என்னும் தனது சுயசரிதை புத்தகத்தை கடந்த வாரம் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.