மேலும் அறிய

Nayanthara : நாங்கள் எம்பிஏ பட்டதாரிகள் கிடையாது: சினிமா தான் தெரியும்... பிசினஸில் நயன் கலக்க யார் காரணம் தெரியுமா?

Nayanthara : நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் செய்து வரும் தொழில்கள் அனைத்தையும் சிறப்பாக நடத்த பக்கபலமாக இருக்கும் வேலுமணிக்கு நன்றி சொல்லி விக்னேஷ் சிவன் போஸ்ட்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என் கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்க கூடிய ஒரே தமிழ் நடிகையாக வலம் வருகிறார். ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக 10 கோடி ரூபாய் வரை பெறுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி 'ஜவான்' படம் மூலம் பாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்து வெற்றி பெற்றுள்ளார். 

Nayanthara : நாங்கள் எம்பிஏ பட்டதாரிகள் கிடையாது: சினிமா தான் தெரியும்... பிசினஸில் நயன் கலக்க யார் காரணம் தெரியுமா?

2005ம் ஆண்டு வெளியான 'ஐயா' படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா படிப்படியாக கஜினி, சந்திரமுகி, வல்லவன் என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து பிரபலமானவருக்கு 2007ம் ஆண்டு வெளியான 'பில்லா' திரைப்படம் மிகப்பெரிய டர்னிங் பாய்ண்ட் படமாக அமைந்தது. அதற்கு பிறகு மாஸான நடிகையாக களம் இறங்கினார். ராஜா ராணி, நானும் ரவுடி தான், இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, விஸ்வாசம், பிகில், தனி ஒருவன், அண்ணாத்தே என அடுக்கிக் கொண்டே போகும் அளவுக்கு டாப் கியரில் உச்சத்தை அடைந்தார். 

நயன்தாரா சினிமாவில் மட்டுமின்றி ஒரு தொழில் அதிபராகவும் வெற்றி நடைபோட்டு வருகிறார். சினிமாவில் நடிப்பது சைட் பிசினஸ் எனும் அளவுக்கு எக்கச்சக்கமான தொழில்களை செய்து வருகிறார். நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி ரௌடி பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதன் மூலம் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார். தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் போன்ற படங்களை தயாரித்து வருகிறார்கள். 

Nayanthara : நாங்கள் எம்பிஏ பட்டதாரிகள் கிடையாது: சினிமா தான் தெரியும்... பிசினஸில் நயன் கலக்க யார் காரணம் தெரியுமா?

இது தவிர லிப் பாம், 9 ஸ்கின், பெமி 9, டிவைன் புட்ஸ் உள்ளிட்ட பல தொழில்களை செய்து வருவதுடன் விக்கி பிலிக்ஸ், டார்க் டேலண்ட், கிரியேட் வெர்ஸ், கார்பன் மெட்ராஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளார். ஒரு பக்கம் நடிகையாகவும் மறுபக்கம் தொழிலதிபராகவும் கலக்கி வரும் நயன்தாராவுக்கு உறுதுணையாய் இருப்பது யார் என்பது குறித்து பலருக்கும் பல கேள்விகள் இருக்கும். ஒரு  பெண்ணின் வளர்ச்சிக்கு பின்னால் உறுதுணையாய் ஒரு ஆண் இருப்பார் என்பது போல நயன்தாராவுக்கு பக்கபலமாய் இருப்பது விக்னேஷ் சிவன் தான் என் நினைப்பார்கள். 

ஆனால் உண்மையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் வெற்றிக்கு காரணமாக இருப்பவர் தைரோகேர் என்ற நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் வேலுமணி. அவருக்கு நன்றி சொல்லும் வகையில் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

"நானும் நயன்தாராவும் எம்பிஏ பட்டதாரிகள் அல்ல. நாங்கள் அறிந்ததெல்லாம் சினிமா மட்டும் தான். அதை தினம் தினம் கற்று வருகிறோம். ஆனால் தொடர்ச்சியாக நாங்கள் எடுத்து வைக்கும் வணிக முயற்சி மற்றும் எப்படி புதிய தளங்களை உடைப்பது போன்றவற்றை எங்களுக்கு வழிகாட்ட வேலுமணி அவர்களை போன்ற மகத்தான அறிவையும் விலைமதிப்பற்ற அனுபவத்தையும் பகிர்ந்து கொள்வது தான் காரணம். நாங்கள் என்றும் உங்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம். நாங்கள் எங்கள் எல்லா வணிகங்களில் எப்போதும் சரியான விஷயங்களைச் செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள எங்கள் தலைமை நிர்வாக அதிகாரிகள் குழுவுடனும் பொறுமையாக நேரத்தைச் செலவழித்ததற்கு உங்களுக்கும் மற்றும் ஆனந்த் மற்றும் எங்களின் டீமுக்கும் நன்றி..." என போஸ்ட் மூலம் தெரிவித்து இருந்தார் விக்னேஷ் சிவன். 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

WTC Points Table: இந்திய ரசிகர்களுக்கு பேரிடி..! ஆஸி., உடன் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பின்ஷிப் புள்ளிபட்டியல், ஃபைனல் வாய்ப்பு காலி?
WTC Points Table: இந்திய ரசிகர்களுக்கு பேரிடி..! ஆஸி., உடன் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பின்ஷிப் புள்ளிபட்டியல், ஃபைனல் வாய்ப்பு காலி?
Ind vs Aus : சோலி முடிஞ்சிது!  10 போங்கஆண்டுகளுக்கு பிறகு பாக்சிங் டெஸ்ட் இந்திய படு தோல்வி..
Ind vs Aus : சோலி முடிஞ்சிது! 10 போங்கஆண்டுகளுக்கு பிறகு பாக்சிங் டெஸ்ட் இந்திய படு தோல்வி..
 ‘போராட்டம்லாம் இல்லை; புது ரூட் எடுப்போம்’ - அண்ணா பல்கலை விவகாரத்தில் டைம் கேட்கும் விஜய்! 
 ‘போராட்டம்லாம் இல்லை; புது ரூட் எடுப்போம்’ - அண்ணா பல்கலை விவகாரத்தில் டைம் கேட்கும் விஜய்! 
இனி மாதம் ரூ.1000 - புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! யாருக்கெல்லாம்?
இனி மாதம் ரூ.1000 - புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! யாருக்கெல்லாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Rape Issue | ”யார் அந்த சார்?”EA MALL-ல் நடந்தது என்ன? தமிழகத்தை அதிரவிடும் போஸ்டர்North Indians VS Police | உருட்டுக்கட்டை..இரும்பு ROD..போலீஸ் vs வடமாநில கும்பல்! உச்சக்கட்ட மோதல்Ramadoss Anbumani fight | தைலாபுரம் புறப்பட்ட அன்புமணி அப்பாவிடம் சமாதானமா? உச்சகட்ட பரபரப்பில் பாமகVaniyambadi News | ஓட்டலுக்கு திடீரென வந்த நபர் ஊழியரை தாக்கிய கொடூரம் அதிர்ச்சி CCTV காட்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
WTC Points Table: இந்திய ரசிகர்களுக்கு பேரிடி..! ஆஸி., உடன் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பின்ஷிப் புள்ளிபட்டியல், ஃபைனல் வாய்ப்பு காலி?
WTC Points Table: இந்திய ரசிகர்களுக்கு பேரிடி..! ஆஸி., உடன் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பின்ஷிப் புள்ளிபட்டியல், ஃபைனல் வாய்ப்பு காலி?
Ind vs Aus : சோலி முடிஞ்சிது!  10 போங்கஆண்டுகளுக்கு பிறகு பாக்சிங் டெஸ்ட் இந்திய படு தோல்வி..
Ind vs Aus : சோலி முடிஞ்சிது! 10 போங்கஆண்டுகளுக்கு பிறகு பாக்சிங் டெஸ்ட் இந்திய படு தோல்வி..
 ‘போராட்டம்லாம் இல்லை; புது ரூட் எடுப்போம்’ - அண்ணா பல்கலை விவகாரத்தில் டைம் கேட்கும் விஜய்! 
 ‘போராட்டம்லாம் இல்லை; புது ரூட் எடுப்போம்’ - அண்ணா பல்கலை விவகாரத்தில் டைம் கேட்கும் விஜய்! 
இனி மாதம் ரூ.1000 - புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! யாருக்கெல்லாம்?
இனி மாதம் ரூ.1000 - புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! யாருக்கெல்லாம்?
சில்வர் ஜுப்ளியில் திருவள்ளுவர் சிலை: கண்ணாடி இழை பாலம் டூ தோரணவாயில் அடிக்கல் வரை! அரசின் அசத்தல் ஏற்பாடு!
சில்வர் ஜுப்ளியில் திருவள்ளுவர் சிலை: கண்ணாடி இழை பாலம் டூ தோரணவாயில் அடிக்கல் வரை! அரசின் அசத்தல் ஏற்பாடு!
TVK Vijay: தங்கைகளுக்கு தவெக தலைவர் விஜய் கைப்பட கடிதம் - ”திமுகவால் எந்த பயனும் இல்லை” பாலியல் வன்கொடுமைகள்
TVK Vijay: தங்கைகளுக்கு தவெக தலைவர் விஜய் கைப்பட கடிதம் - ”திமுகவால் எந்த பயனும் இல்லை” பாலியல் வன்கொடுமைகள்
சாப்பாடு பரிமாற தாமதம்; கோபத்தில் மணமகன் எடுத்த முடிவு! ஷாக்கான மணப்பெண்! 
சாப்பாடு பரிமாற தாமதம்; கோபத்தில் மணமகன் எடுத்த முடிவு! ஷாக்கான மணப்பெண்! 
IND VS AUS BGT Test: கடைசி நாளில் சரித்திரம் படைக்குமா இந்தியா? ஆஸி., 234 ரன்களுக்கு ஆல்-அவுட் - ரோகித் படையின் இலக்கு?
IND VS AUS BGT Test: கடைசி நாளில் சரித்திரம் படைக்குமா இந்தியா? ஆஸி., 234 ரன்களுக்கு ஆல்-அவுட் - ரோகித் படையின் இலக்கு?
Embed widget