Nikki Galrani: விரைவில் டும் டும் டும்... மிருகம் பட நடிகரை கரம் பிடிக்கிறாரா நடிகை நிக்கி கல்ராணி?
நடிகை நிக்கி கல்ராணி, நடிகர் ஆதி இருவருக்கும் விரைவில் டும்.டும்.டும். எனத் தகவல்!
தமிழ் சினிமாவில் ஜி.வி பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. இதையெடுத்து யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா, மரகத நாணயம், ராஜவம்சம் உள்ளிட்ட பல படங்களில் நிக்கி நடித்துள்ளார். தமிழில் 25 படங்களுக்கு மேல் நடிதுள்ள நடிகை. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில்,இவர் பிரபல நடிகர் ஆதியை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஆதி ‘மிருகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ச்சியாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர் தற்போது ‘சிவுடு’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை தமிழ் சினிமா இயக்குநர் சுசீந்திரன் இயக்குகிறார். இதில் ஆதிக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.
முன்னதாக, யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நிக்கி கல்ராணி ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இருவரும் நல்ல நண்பர்கள். ஆனால், ஜூலை 2020 இல் ஆதி தந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நிக்கி கலந்துகொண்டது முதல் இருவரும் காதலிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு, நிக்கி, ஆதி இருவரும் ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து ஒன்றாக வெளியேறும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இது அவர்கள் இருவரின் காதல் பற்றிய வதந்திகளை மேலும் அதிகப்படுத்தியது.
தற்போது நடிகை நிக்கி கல்ராணிக்கும் நடிகர் ஆதிக்கும் திருமணம் நடக்க இருப்பதாகக தகவல் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது குறித்து இருவருமே தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்