Sathyaraj : டெக்னாலஜி செய்யும் சாகசங்கள்.. AI மூலம் சத்யராஜை இளமையாக மாற்றிய வெப்பன் இயக்குநர்..
வெப்பன் படத்தில் நடித்துள்ள சத்யராஜை இளமையாக காட்ட புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுக செய்திருக்கிறது படக்குழு.
‘சவாரி’, ‘வெள்ள ராஜா’ போன்ற இணைய தொடர்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'வெப்பன்'. சூப்பர்மேன் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் ராஜீவ் மேனன், தான்யா ஹோப், மைம் கோபி, யாஷிகா ஆனந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். மில்லியன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.எஸ்.மஞ்சூர் இப்படத்தை தயாரித்துள்ளார்.
வெப்பன்:
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகெங்கிலும் வெளியாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வசந்த் ரவி முன்னணி கேரக்டரில் நடித்துள்ள 'வெப்பன்' திரைப்படத்தின் டீசரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது . இதன் டீசரை நடிகர் விஷால் தனது சோஷியல் மீடியா பக்கம் மூலம் வெளியிட்டார்.
அதிரடியான கதையம்சம் கொண்ட இப்படத்தில் அபூர்வ சக்தி கொண்ட ஒரு மனிதனாக சத்யராஜ் நடித்துள்ளார். உலகில் உள்ள எந்த ஒரு ஆயுதத்தாலும் அழிக்க முடியாத ஒரு மனிதனை எப்படி எதிர்கொள்கிறார்கள்? அவனை அழிக்கும் முயற்சிகள் என்ன ஆனது என்பதுதான் படத்தை கதைக்களம் என்பது தற்போது வெளியாகியுள்ள 'வெப்பன்' டீசர் மூலம் வெளிப்படுகிறது.
சூப்பர் மனிதன்
உலகில் உள்ள எந்த ஆயுதத்தாலும் அவனை அழிக்க முடியாது, ஏனென்றால் அவன் 'சூப்பர் ஹியூமன்' என்ற அதிரடியான பஞ்ச் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. படத்தின் கதையம்சத்திற்கு ஏற்றவாறு பல வித்தியாசமான கோணங்களில் காணப்படும் சத்யராஜ் இதுவரையில் ஏற்று நடிக்காத ஒரு மாறுபட்ட கேரக்டரில் நடித்துள்ளார்.
இளமையாக காட்ட ஏ.ஐ தொழில்நுட்பம்
Apple-system, BlinkMacSystemFont, 'Segoe UI', Roboto, Oxygen, Ubuntu, Cantarell, 'Open Sans', 'Helvetica Neue', sans-serif;">இந்தப் படத்தில் நடிகர் சத்யராஜை இளமையாக காட்டுவதற்கால தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஏ.ஐ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் செயற்கைத் நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து படத்தின் இயக்குநர் குகன் சென்னியப்பன் தெரிவிக்கையில் “பொதுவாகவே இந்த மாதிரியான சூழ்நிலைகளில் தேர்ந்து தொழில்நுட்பக் கலைஞர்களை பயன்படுத்துவது தான் வழக்கம் . ஆனால் நேரம் குறைவாக இருந்த காரணத்தினால் நாங்கள் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்தோம். தொழில்நுட்பக் கலைஞர்களால் குறைவான நேரத்தில் எங்களால் முடிக்க முடிந்தது.” என்று தெரிவித்துள்ளார்.