Watch Video : அப்படியே அஜித் மாதிரியே இருக்காரே ? ஊ சொல்றியா மாமா பாட்டுக்கு நடனமாடும் வீடியோ வைரல்
புஷ்பா படத்தின் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அஜித் மாதிரியே ஒருவர் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
அஜித் குமார்
மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. த்ரிஷா , அர்ஜூன் , ரெஜினா ,ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் முடிவு வந்தது. தற்போது இறுதிகட்ட டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் முதல் பாடல் டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அஜித் நடனம் ?
விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அஜித் மூன்று வெவ்வேறு கெட் அப்பில் நடித்து வருகிறார். விடாமுயற்சி , குட் பேட் அக்லி என இரு வெவ்வேறு கதைக்களங்களில் அஜித்தை பார்க்க ரசிகர்கள் மிக ஆவலாக காத்திருக்கிறார்கள்.
தற்போது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஊ சொல்றியா பாடலுக்கு அஜித் மாதிரியே ஒருவர் நடனமாடுகிறார். முதல் பார்வைக்கு அஜித் தான் ஆடுவது என்று ரசிகர்கள் நம்பி வீடியோவை பகிர தொடங்கிவிட்டார்கள். ஆனால் கவனித்து பார்த்தால் அது அஜித் இல்லை என்று தெரிகிறது. குட் பேட் அக்லி படத்தில் அஜித் இந்த மாதிரி ஒரு நடனமாடினால் திரையரங்கம் அதிரும் என அஜித் ரசிகர்கள் தங்கள் கற்பனைகளையும் வளர்க்கத் தொடங்கிவிட்டார்கள்
Theater will go crazy if AK performs like this. Do you agree? 😍😍
— Aadhira (@trend_1O1) December 25, 2024
❤️ #AjithKumar #VidaaMuyarchi pic.twitter.com/x7OdwpWL2K
மேலும் படிக்க : TTF Vasan: ஷாலின் சோயாவை கழற்றிவிட்ட டிடிஎஃப் வாசன்? இளம் நடிகையுடன் பைக்கில் ஊர் சுற்றும் வீடியோ வைரல்!
நீதி என்கிற பேரில் வன்முறையை விதைக்கும் அட்லீ... பேபி ஜான் படத்தின் காட்சியால் சர்ச்சை