Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’திமுக-காங்கிரஸ் கூட்டணியை பிரித்து த.வெ.க-வுடன் சேர்க்க வேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தில் முதல்வரின் மருமகன் நெருப்பை அள்ளிக் கொட்டியதால், துடிதுடித்துப்போன பிரவீன் சக்ரவர்த்தி விஜயை சந்தித்துள்ளார்’

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பிளவை ஏற்படுத்த முயற்சித்துவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி, ரகசியமாக நேற்று விஜயை சந்தித்தார். தன்னால் காங்கிரஸ் கட்சியை திமுக கூட்டணியில் இருந்து தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்கு கொண்டுவருவது சிரமம் என்பதையும் ஆனால், அப்படி கொண்டுவரமுடியாதப்பட்சத்தில் நானே உங்கள் தலைமை ஏற்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துகொள்கிறேன் என்ற கோரிக்கையை முன் வைத்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பிரவீன் எங்களிடம் அனுமதி கோரவில்லை - கடும் கோபத்தில் கிரிஷ் ஜோடங்கர், செ.பெ.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேசுவதற்கு மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தலைமையில் குழு அமைத்து அவர்கள் ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிவிட்ட நிலையில், பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த அதிகபிர’சங்கி’த்தன நடவடிக்கை திமுக மற்றும் காங்கிரஸ் என்ற இரண்டு தலைமயையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது.
எங்களிடம் அனுமதி பெற்று பிரவீன் சக்ரவர்த்தி விஜயை சந்திக்கவில்லையென்று, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர், கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் பட்டவர்த்தனமாக போட்டுட்டைத்துவிட்ட நிலையில், பிரவீன் சக்ரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை தயாராகி வருகிறது.
கார்க்கேவை சந்திப்பு – ராகுலிடம் நேரடியாக பேச்சு | கூட்டணியை உறுதி செய்த சபரீசன்
ஆனால், இதற்கு முன்னதாகவே, நவம்பர் 15 மற்றும் 16ஆகிய தேதிகளில் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசன். டெல்லியில் நம்பர் 10 ராஜாஜி மார்க்கில் உள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூனா கார்க்கேவை சந்தித்து பேசியிருக்கிறார். அங்கிருந்தே, ராகுல்காந்தியிடம் அவர் தொலைபேசி மூலம் பேசி, தமிழ்நாட்டில் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாக தொடர்கிறது என்பதை உறுதி செய்திருக்கிறார். அதே நேரத்தில் தொகுதிகளின் எண்ணிக்கையை திமுக தலைமையிடம் பேசி முடிவு செய்துகொள்ளலாம் என்றும் பேசி முடிக்கப்பட்டிருக்கிறது.
ராகுல்காந்தி, மல்லிகார்ஜூனா கார்க்கே ஆகிய இருவருமே முதல்வரின் மருமகன் சபரீசனிடம் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில்தான் நாங்கள் உறுதியாக பயணிப்போம் என்றும் அல்லு, சில்லு செய்யும் சேட்டைகளையெல்லாம் கண்டுகொள்ள வேண்டாம் என்றும் கூறியிருக்கின்றன. அதோடு, ஆட்டம் போட நினைக்கும் காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகளை அடக்கி வைக்க வேண்டும் என்றும் ராகுலிடம் சபரீசன் வலியுறுத்தி வந்திருக்கிறார். இந்த சந்திப்பின்போது, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரும் உடனிருந்திருக்கிறார். அவருமே தமிழ்நாட்டில் காங்கிரஸ்க்கு பாதுகாப்பான கூட்டணி என்றால் அது திமுக மட்டுமே என்று அந்த சந்திப்பின்போதே தெரிவித்திருக்கிறார். இதை முறிக்க முயற்சிக்கும் சகுனிகளை, சண்டமாருதம் செய்ய வேண்டும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
அதிர்ச்சியில் பிரவீன் சக்ரவர்த்தி
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை பிரித்து தமிழக வெற்றிக் கழகத்தோடு சேர்க்க வேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தில் முதல்வரின் மருமகன் நெருப்பை அள்ளிக் கொட்டிவிட்டார் என்று துடித்துப்போன பிரவீன் சக்ரவர்த்தி, என்னசெய்வதென்று தெரியாமல், நேற்று விஜயை சந்தித்து தன்னுடைய புலம்பலை வெளிப்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
சீட் கொடுத்தா இருப்பாரா ? https://t.co/ELA5POwOov
— Raja Shanmugasundaram (@SRajaJourno) December 5, 2025
ஆனால், பிரவீன் சக்ரவர்த்தியின் ட்ராக் ரெக்கார்டை முழுமையாக தன்னுடைய அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி மூலம் அறிந்துகொண்ட விஜய், அவரை உடனடியாக கட்சியில் சேர்க்க ஒப்புதல் அளிக்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது





















