மேலும் அறிய

Latest OTT Releases : யோகிபாபுவின் போட் முதல் விஜயின் தி கோட் வரை..லேட்டஸ்டாக ஓடிடிக்கு வரும் படங்கள்

யோகிபாபு நடித்துள்ள போட் முதல் விஜயின் தி கோட் வரை இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களைப் பார்க்கலாம்

தி கோட்

தி கோட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்டமர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியான படம் தி கோட். பிரபுதேவா , பிரஷாந்த் , சினேகா , மீனாக்‌ஷி செளதரி , லைலா , பிரேம்ஜி  உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இவர்கள் தவிர்த்து த்ரிஷா , சிவகார்த்திகேயன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்கள். தி கோட் திரைப்படம் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது. 

தங்கலான்

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. பார்வதி திருவொத்து , மாளவிகா மோகணன் , பசுபதி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் இந்தியிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த செப்டம்ப 20 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருந்த தங்கலான் சில காரணங்களால் ஒத்திவைக்கப் பட்டது. தற்போது வரை இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படவில்லை. அக்டோபர் மாதத்திற்குள்ளாக தங்கலான் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்

வாழை

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியான வாழை ஒரு மாத காலத்திற்கும் மேலாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது.  குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய இருவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கலையரசன் , நிகிலா விமல் , ஜே சதிஷ் குமார் , திவ்யா துரைசாமி , ஜானகி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்கள். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் , ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் 11 ஆம் தேதி இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது

போட்

இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள படம் போட் . இப்படத்தில் கெளரி கிஷன் , என்.எஸ் பாஸ்கர் , சின்னி ஜெயந்த்  உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. இன்று அக்டோபர் 1 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

டிமாண்டி காலணி 2

அஜய் ஆர் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி பிரியா பவாணி சங்கர் நடிப்பில் உருவான படம் டிமாண்டி காலணி. கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுக்களைப் பெற்றது. கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் இப்படம் ஜீ ஃபைவ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது

 

 

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget