மேலும் அறிய
Madha Gaja Raja Trailer : 12 வருடம் கழித்து வைரலாகும் விஷாலின் மதகஜராஜா பட டிரைலர்
Madha Gaja Raja Trailer : சுந்தர் சி இயக்கத்தில் விஷால் , சந்தானம் , அஞ்சலி , வரலட்சுமி நடித்துள்ள மதகஜராஜா படத்தின் டிரைலர் வெளியாகி 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது
மதகஜராஜா
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த 2012 ஆம் தொடங்கப்பட்ட படம் மதகஜராஜா. சந்தானம் , அஞ்சலி , வரலக்ஷ்மி , உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மதகஜராஜா படத்தின் படப்பிடிப்பு கடந்த 2013 ஆம் ஆண்டு முடிவடைந்தது. ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளருக்கு இருந்த பொருளாதார பிரச்சனைகளால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்படத்தில் நடிகர் விஷால் பாடிய மை டியர் லவ்வர் என்கிற பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. தற்போது கிட்டதட்ட 12 ஆண்டுகள் கழித்து இப்படம் வரும் பொங்கலுக்கு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக இருப்பதாக உறுதிபடுத்தப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 12 ஆண்டுகள் முன்பாக யூடியூபில் வெளியான இப்படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
கல்வி
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion