OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
அதிமுக ஒருங்கிணைப்பு குழு குறித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு டிசம்பர் 15 வரை ஓபிஎஸ் கெடு விதித்திருந்த நிலையில், ஓ பன்னீர்செல்வம் திடீரென டெல்லி விஜயம் மேற்கொண்டுள்ளது அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சில நாட்களுக்கு முன் தவெகவில் இணைந்த நிலையில் ஓபிஎஸ்ஸின் இந்த பயணம் கவனம் பெற்றுள்ளது..
அதிமுகவில் உட்கட்சி பூசல் தலைதூக்கி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெ மறைவிற்கு பிறகு அதிமுக ஈபிஎஸ் ஓபிஎஸ் என இரு அணிகளாக பிரிய ஒட்டுமொத்த கண்ட்ரோலையில் கையில் எடுத்தார் அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ். இதனையடுத்து டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா என ஈபிஎஸ்ஸின் தலைமைக்கு எதிராக குரலெழுப்பி வந்தனர். மேலும் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்தும் பேசி வந்தனர். இந்நிலையில் இந்த லிஸ்டில் சமீபத்தில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். மேலும் செங்கோட்டையன் டெல்லி பாஜக தலைமையிடம் நெருக்கம் காட்டி வந்தார்.இதனையடுத்து அதிமுக ஒருங்கிணைப்புக்காக ஈபிஎஸ்க்கு கெடு விதித்த நிலையில், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து எடப்பாடியால் அதிரடியாக நீக்கப்பட்டார். இதனையடுத்து செங்கோட்டையன் தனது கோபி எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து ட்விஸ்ட் கொடுத்தார். செங்கோட்டையனின் இந்த மூவை யாரும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை.
இந்நிலையில் தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தனது இருப்பை காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஓபிஎஸ் ஈபிஎஸ்ஸுக்கு அதிமுக ஒருங்கிணைப்பு குழு குறித்து டிசம்பர் 15 வரை கெடு விதித்தார். இந்நிலையில் இன்று திடீரென டெல்லி புறப்பட்டார் ஓபிஎஸ். கூட்டணி குறித்து ஜெபி நட்டாவிடம் பேச்சுவார்த்தை நடத்த ஓபிஎஸ் டெல்லி சென்றுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செங்கோட்டையன் தவெகவுக்கு தாவிவிட்டார், தினகரன் எண்டிஏ கூட்டணியில் இருந்து விலகிவிட்டார்..இந்நிலையில் ஓபிஎஸ் என்ன மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.





















