மேலும் அறிய

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?

பாஜக அழைப்பின் பேரில் தனது மகனுடன் டெல்லி சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், அமித் ஷாவை சந்தித்து 20 நிமிடங்கள் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் தற்போது எந்த திசையில் செல்வது என தெரியாமல் திணறி வருகிறார். ஓபிஸ் உட்கட்சி மோதல் காரணமாக , எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்து சட்ட போராட்டங்கள் மேற்கொண்டார். ஆனால் அனைத்திலுமே தோல்விதான் கிடைத்தது.

இதனையடுத்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் தோல்வி அடைந்தார். அடுத்தாக சட்டமன்ற தேர்தலிலும் பாஜக கூட்டணியில் நீடிப்போம் என எதிர்பார்த்தவருக்கு, அதிமுக- பாஜக கூட்டணி அமைந்ததால் தனித்து விடப்பட்டார். இதனால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதே நேரம் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயார் என தெரிவித்தார். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கு துரோகம் செய்தவர்களை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லையென உறுதியாக கூறிவிட்டார். 

அடுத்ததாக தனக்கு ஆதரவாக தன்னுடன் இருந்த எம்எல்ஏ மனோஜ் பாண்டியனும் திமுகவிற்கு பல்டி அடித்து விட்டார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்க்கு ஆதரவாக குரல் கொடுத்த செங்கோட்டையனும் திடீரென அதிமுக ஒருங்கிணைப்பு பணியை தூக்கி போட்டுவிட்டு நடிகர் விஜய்யின் தவெகவில் இணைந்து விட்டார். அடுத்தடுத்த நிகழ்வுகளால் அதிர்ச்சியான ஓபிஎஸ் டிசம்பர் 15ஆம் தேதி முக்கிய முடிவை எடுக்க இருப்பதாக  அறிவித்திருந்த நிலையில், நேற்று முன் தினம் யாருக்கு தெரியாமல் கொச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார் ஓபிஎஸ்.

தனது புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய சென்றுள்ளதாக தகவல் வெளியான நிலையில், நேற்று இரவு பாஜக மூத்த தலைவரான அமித்ஷாவை 20 நிமிடங்கள் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலைப்பாடு, எடப்பாடி பழனிசாமியின் முடிவுகளால் தமிழகத்தில் அதிமுக தொடர்ந்து வலுவிழந்து வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளார். அதே நேரம்  தான் புதிதாக கட்சி தொடங்க இருப்பதாகவும் அந்த கட்சி பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது ஓபிஎஸ் மகன் மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தியும் உடன் இருந்தாக தகவல் வெளியாகியுள்ளது. 

டெல்லியில் முகாமிட்டுள்ள ஓபிஎஸ், பாஜகவை சேர்ந்த மற்ற தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அவர்கள் உடன் பேச்சுவாரத்தை நடத்திய பின்னர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் வீடியோக்கள்

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
ABP Nadu Top 10, 13 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 13 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget