vishal | ‛உங்கள நினைச்சு பெருமையா இருக்குப்பா..’ -83 வயதில் தந்தை செய்த சாதனையால் நெகிழ்ந்த விஷால்!
உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய உணவு பழக்கம் ஒரு மனிதனை எந்த வயதிலும் சுறு சுறுப்புடனும் , இளம் வயதினரை போல உத்வேகத்துடனும் வைத்திருக்கும் என்பதற்கு விஷாலின் தந்தை ஜி.கே ரெட்டி ஒரு முன் உதாராணம்.
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால்.விஷால் செல்லமே படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானாலும் சினிமா ஒன்றும் அவருக்கு புதிதல்ல . அவரது தந்தை ஜி.கே ரெட்டி தயாரிப்பாளராக 1987 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். விஷாலுக்கும் அவரது தந்தைக்குமான நெருக்கம் அவ்வபோது விஷால் பதிவிடும் சமூக வலைத்தள பதிவுகள் மூலமாகவே நம்மால் புரிந்துக்கொள்ள முடியும். 83 வயதாகும் ஜி.கே ரெட்டி அந்த வயதில் இருக்கும் மற்றவர்களை விட முற்றுலும் மாறுபட்டவர். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனது செலுத்தும் விஷால் தந்தை இந்த வயதிலும் உடற்பயிற்சி செய்வது , உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது , உடல் தகுதி போட்டிகளில் பங்கேற்பது , யோகா செய்வது போன்ற பல விஷயங்களை செய்து வருகிறார்.
Damn proud of u Dad, U r more than an Inspiration. At this age on the track and winning medals is a Big achievement. Way to go. Makes me a lil jealous and missin my school sports days. GB pic.twitter.com/bBpBeaHrFe
— Vishal (@VishalKOfficial) December 22, 2021
அவரின் சாதனைகள் குறித்து அவ்வபோது தனது சமூக வலைத்தள் பக்கங்களில் பதிவிடும் நடிகர் விஷால் தற்போது தனது தந்தை ஓட்டப்பந்தயத்தில் பதக்கம் வாங்கியிருப்பது குறித்து பெருமிதத்துடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் . அதில் “என் அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன், நீங்கள் இன்ஸ்பிரேஷனுக்கும் மேல். இந்த வயதில் டிராக்கில் ஓடி பதக்கம் வெல்வது பெரிய சாதனை..way to go... நீங்கள் செய்யும் செயல்கள் எல்லாம் என்னை பொறாமைப்பட வைக்கிறது . நான் எனது பள்ளிக்கால ஸ்போர்ட்ஸ் நாட்களை மிஸ் செய்கிறேன் “ என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது அப்பா சென்னை மாநகர மாஸ்டர்ஸ் அத்தலட் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் பரிசு வழங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஷாலின் தந்தை ராட்சசி , ரிச்சி , செம போத ஆகாதே உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய உணவு பழக்கம் ஒரு மனிதனை எந்த வயதிலும் சுறு சுறுப்புடனும் , இளம் வயதினரை போல உத்வேகத்துடனும் வைத்திருக்கும் என்பதற்கு விஷாலின் தந்தை ஜி.கே ரெட்டி ஒரு முன் உதாராணம்.