Vikram Vedha: ‛ஒரு கதை சொல்லட்டுமா சார்...’ இப்போ ‛ஏக் கஹானி போலு சார்...’ இந்தி விக்ரம் வேதா ட்ரெய்லர் ரிலீஸ்!
இந்தியில் வெளியாக இருக்கும் விக்ரம் வேதா திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.
இந்தியில் வெளியாக இருக்கும் விக்ரம் வேதா திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.
View this post on Instagram
இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் 2017ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் 'விக்ரம் வேதா’. இப்படம் இந்தியில் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், சைஃப் அலி கான், நடிப்பில் அதே பெயரில், புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவாகியிருக்கிறது.
இந்த நிலையில் இந்தப்படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்தப்படம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தம்பதிகளான புஷ்கர் - காயத்ரி ஆர்யா நடிப்பில் வெளியான ‘ஓரம் போ’ படம் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமாயினர். தொடர்ந்து நடிகர் சிவா நடிப்பில் உருவான 'வா - குவாட்டர் கட்டிங்' படத்தை இயக்கிய அவர்கள், கடந்த 2017 ஆம் ஆண்டும் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் உருவான ‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கினர். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப்படம் இவர்களது கேரியரில் மட்டுமல்லாது, விஜய் சேதுபதி கேரியரிலும் மிக முக்கியமான படமாக அமைந்தது.
சினிமா உலகில் அதிக கவனம் பெற்ற இந்தப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக தகவல் வெளியான நிலையில், அந்தத்தகவலை கடந்த மார்ச் மாதம் புஷ்கர் மற்றும் காயத்ரி உறுதிப்படுத்தினர். இந்தப்படத்தை தமிழில் ‘விக்ரம் வேதா’ படத்தை தயாரித்த YNOT Studios -வுடன் இணைந்து Plan C Studios மற்றும் Reliance Entertainment, T-Series Films நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன. இந்தப்படத்தில் ஹிருத்திக்ரோஷன் விஜய்சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்திலும், சைஃப் அலி கான் மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் ராதிகா ஆப்தே, ரோகித் சுரேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமிழில் விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம் சி.எஸ் இந்தி ரீமேக்கிற்கு பின்னணி இசை அமைத்துள்ளார். பாடல்களுக்கு விஷால் சேகர் இசையமைத்துள்ளார். 175 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.