Vikram First Review : 'கண்டிப்பா இது ப்ளாக்பஸ்டர்தான்..' : விக்ரம் படத்திற்கு முதல் ரெவ்யூ கொடுத்தது யார் தெரியுமா?
'விக்ரம்' படத்திற்கான டிக்கெட்டுகளை வெறித்தனமாக வாங்கி ரசிகர்கள் அவருக்கு அற்புதமான பதிலைக் கொடுத்து வருகின்றனர்.
மொத்த இந்திய திரையுலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படத்தில் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது.
உலகநாயகனின் கமல்ஹாசனின் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில் கடந்த நான்கு ஆண்டுகளில் அவரது படங்கள் வெளிவரவில்லை. ஜூன் 3ஆம் (நாளை) தேதி வெளியாகும் அவரது 'விக்ரம்' படத்திற்கான டிக்கெட்டுகளை வெறித்தனமாக வாங்கி ரசிகர்கள் அவருக்கு அற்புதமான பதிலைக் கொடுத்து வருகின்றனர். கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த மல்டிஸ்டாரர் படத்தை லோகேஷ் கங்கராஜ் இயக்கியுள்ளார்.
ரிலீஸுக்கு இன்னும் ஒரு நாட்களே உள்ள நிலையில், படம் எப்படி இருக்கும் என்று பெரும் ஆர்வத்தில் அனைவரும் உள்ளனர். இந்த நிலையில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் பேனரில் 'விக்ரம்' படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின் படம் குறித்து அருமையான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். ட்விட்டரில் ஒரு அருமையான முதல் விமர்சனத்தை அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர், ‘விக்ரம் சூப்பர்??? நிச்சயம் பிளாக்பஸ்டர்!"நல்ல திரைப்பட அனுபவத்தை கொடுத்ததற்காக கமல்ஹாசன், விஜய்சேதுபதி, அனிருத் ஃபகத் ஃபாசில் மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் நன்றி’ என்று பதிவிட்டுள்ளார். உதயநிதியின் இந்த பதிவு சமூகவலைதளஙளில் வைரலாகி வருகிறது.
#Vikram super👏🏽👍🏼👍🏼👏🏽thx to ulaganayakan @ikamalhaasan sir @Dir_Lokesh @VijaySethuOffl @anirudhofficial #Fahad @turmericmediaTM and the whole team for this movie experience ! Sure blockbuster !
— Udhay (@Udhaystalin) June 1, 2022
ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரித்துள்ள 'விக்ரம்' படத்திற்கு அனிருத் இசையமைக்க, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங்கை கவனித்துள்ளார். நரேன், எஸ். காயத்ரி, சுவாதிஷ்டா, ஷிவானி நாராயணன், வி.ஜே.மகேஸ்வரி, மைனா நந்தினி, சந்தானபாரதி மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பக்கா ஆக்ஷன் கமர்ஷியல் படமாக விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் உருவாக்கியிருக்கிறார். அனிருத்தின் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி மற்றும் மாஸ்டர் படங்களை இயக்கியவர். இவர் இயக்கிய மூன்று படங்களுமே தனித்துவம் வாய்ந்த படமாக அமைந்தது. கைதி படத்தில் கார்த்தியை வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அசத்திய லோகேஷ், மாஸ்டர் படத்தில் நடிகர் விஜயையும், விஜய் சேதுபதியையும் ரசிகர்களால் கொண்டாட வைத்திருப்பார்.
கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்கியுள்ளதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கேங்ஸ்டர் ரக கதையான இந்த படத்தின் டிரெயிலரே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்