Vikram Movie Booking: விக்ரம் டிக்கெட் ஓப்பனிங் எப்போது? வெளியானது அறிவிப்பு.. வெறியாகும் ரசிகர்கள்..!
Vikram Booking Open Date: ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்பத்தியிருக்கும் விக்ரம் படத்தின் டிக்கெட் எப்போது கிடைக்கும் என்பது குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்பத்தியிருக்கும் விக்ரம் படத்தின் டிக்கெட் எப்போது கிடைக்கும் என்பது குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த அறிவிப்பின் படி, விக்ரம் படத்திற்கான டிக்கெட்டானது வரும் 29 ஆம் தேதியில் இருந்து கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனிலோ அல்லது தியேட்டருக்கு நேராக சென்றோ புக் செய்து கொள்ளலாம். கமல், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
#Vikram Bookings Open from 29th May ! https://t.co/BPMJKoZyox#KamalHaasan #VikramFromJune3 #Vikram @ikamalhaasan @Dir_Lokesh @Ramesh_aravind #Jayaram #YugiSethu @ActorSriman @VijaySethuOffl #FahadhFaasil @anirudhofficial #Mahendran @RKFI @turmericmediaTM pic.twitter.com/dlCdTGT0RM
— Raaj Kamal Films International (@RKFI) May 27, 2022
கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேக்கிங் வீடியோ
இதனைத்தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி படத்தின் ஆடியோ நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் டிரெய்லரும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ட்ரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்தது. டிரெய்லர் வெளியானபோதே, படத்தில் சூர்யா நடித்துள்ளதாக ரசிகர்கள் கணித்தனர்.
புக்கிங் டேட் அறிவிப்பு
'விக்ரம்' படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும், அவர் க்ளைமாக்ஸில் ஒரு கேமியோ வேடத்தில் காணப்படுவார் என்றும் செய்திகள் பரவின. அந்த செய்தியை நிஜமாக்குவதுபோல, அந்த நிகழ்ச்சிலேயே படத்தின் இயக்குநர் லோகேஷ் சூர்யா நடித்திருப்பதை உறுதி செய்தார். இந்த நிலையில், விக்ரம் படத்தின் மூன்றாம் உருவாக இருப்பதாகவும், அதற்கான காரணமாக சூர்யா இருப்பார் என்றும் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்