Pandian Stores 2: மொத்த பணமும் போச்சு... சக்திவேல் - குமரவேல் குமுறுவதை பார்த்து ஆனந்தத்தில் மிதக்கும் மீனா! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 503 ஆவது எபிசோடில் முத்துவேல், சக்திவேல் வீடு, மில் மற்றும் கடை ஆகிய இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்ட நிலையில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது குமரவேல் மற்றும் அரசியின் திருமண நாடகத்திற்கு பிறகு இப்போது யாரும் எதிர்பாராத காட்சிகளுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. உண்மையில் அரசி தனக்கு தானே தாலி கட்டுக் கொண்ட சம்பவம் பாண்டியன் மற்றும் கோமதிக்கு எப்போது தெரியவரும் என்பதும், அதன் பிறகு என்ன நடக்கும் என்பது பற்றி இதுவரை தெரியவில்லை. ஆனால், அவர் தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டு நாடகம் ஆடுவது மீனா மற்றும் ராஜீக்கு தெரிந்து இப்போது வரையில் இருவரும் அமைதி காத்து வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நேற்றைய எபிசோடில், கட்டுக் கட்டாக முத்துவேல் மாமா வீட்டில் பணம் இருப்பதாக மீனாவிடம் சுகன்யா உலறி கொட்டவே, அதை பிடித்துக் கொண்ட மீனாவோ வருமான வரித்துறைக்கு போன் செய்து முத்துவேல் குடும்பத்தையே ஆட்டம்காண வைத்துள்ளார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது குறித்து இன்றைய 503ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். இதில் வருமான வரித்துறை அதிகாரிகள் முத்துவேல் வீட்டிற்கு வந்த நிலையில், அங்கு முத்துவேலுவைத் தவிர மற்ற அனைவரும் வீட்டில் இருக்கிறார்கள்.

நிலம் வாங்குவதற்கு தேவையான பணத்தை சூட்கேஸில் எடுத்துக் கொண்டு சக்திவேலும், அவரது மகன் குமாரவேலுவிம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு புறப்பட தயாராக இருந்த பார்த்து வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளே வருகிறார்கள். அவர்களைப் பார்த்து கோபம் அடைந்த சக்திவேல், யாராவது கோடீஸ்வரன் வீட்டிற்கு சென்று ரெய்டு நடந்துங்க. இங்கு எதுக்கு சார் வந்தீங்க. நாங்க மில் நடத்தி அதன் மூலமாக சம்பாதிக்கிறோம். மேலும், இந்த பணம் நிலம் வாங்கவும், மில்லில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கும், எங்களது குடும்பத்திற்கும் தேவையான பணம் என்று கூறி சக்திவேல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார்.
அதற்குரிய ஆவணங்களையும், வங்கி கணக்கையும் அதிகாரிகள் கேட்க அப்படியே அமைதியாக நின்றனர். மீறி பேசினால் காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு உங்களை கைது செய்வோம் என வருமான வரித்துறை அரிகாரிகள் மிரட்டுகிறார்கள். அதன் பிறகு வீட்டில் உள்ள எல்லா அறைகளுக்கும் சென்று ஆவணங்களையும், பணத்தையும் எடுத்து வந்து கணக்கில் வரவில்லை என்று கூறி எல்லா பணத்தையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.
இதைத் தொடர்ந்து முத்துவேலுவிற்கு போன் செய்யவே, அவரோ மில், மற்றும் கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக கூறுகிறார்கள். மேலும் சக்திவேல் மற்றும் குமரவேல் இருவரையும் உடனே கிளம்பி மில்லிற்கு வர சொல்கிறார்கள். அவர்கள் இருவரும் உடனே கிளம்ப இதையெல்லாம் மீனா தனது வீட்டு ஜன்னல் வழியாக சிரித்துக் கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் முடிவடைந்துள்ளது.






















