Bharathi kannamma: இனிமே நீங்க டாக்டர் அப்பா..! செக் வைத்த லட்சுமி.. சிக்கித்தவித்த பாரதி! அடுத்த ட்விஸ்ட்!!
தனது அப்பாதான் பாரதி என்று தெரிந்துகொண்ட லட்சுமி தனது அப்பாவின் அன்பில் இருக்க விரும்பி, பாரதியை தேடி செல்கிறார்.
விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்று. பாரதி கண்ணம்மா. இதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. பாரதி கண்ணம்மா இருவரும் எப்போது ஒன்று சேர்வார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்ப்பது ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் லட்சுமி தனது அப்பா பாரதிதான் என்பதை தெரிந்து கொண்டார். இதையடுத்து, இந்த சீரியலிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
முன்னதாக, பாரதியிடம் வளரும் ஹேமா, தனக்கு அம்மா வேண்டும் என நினைக்கவே லட்சுமியிடம் உன்னுடைய அம்மா கண்ணம்மாவுக்கும், என்னுடை அப்பா பாரதிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாமா எனக்கேட்கிறார். இதனால் ஆத்திரமடையும் லட்சுமி, “ இனி தேவையில்லாமல் எதுவும் பேசாத, நிச்சயம் என் அப்பா வருவார்“ என கூறிவிடுகிறார்.
இதன்பின்னர் தொடர்ந்து கண்ணம்மா என்ன சொன்னாலும், தன்னிடம் இருக்கும் ஆதாரத்தை வைத்துக்கொண்டு அப்பாவைத் தேடி வருகிறார். தவிப்புடன் தன் தந்தையை லட்சுமி தேடிவருகிறார். இதற்கிடையில் தான் லட்சுமி எதையும் கேட்காமல் அப்பா யார் எனத் தேடிக்கொண்டு இருப்பதாகவும், பாரதி தான் அப்பா என சொல்லிவிடுவேன் என்று பாரதி குடும்பத்தாரிடம் தெரிவிக்கிறார். ஆனால் பாரதி இதனை மறுக்கவே, கண்ணம்மா நான் நீங்கள் தான் லட்சுமியின் அப்பான்னு சொல்லப்போறேன்னு சொல்வதை லட்சுமி கேட்டு விடுகிறார்.
தொடர்ந்து, தனது அப்பாதான் பாரதி என்று தெரிந்துகொண்ட லட்சுமி தனது அப்பாவின் அன்பில் இருக்க விரும்பி, பாரதியை தேடி செல்கிறார். பாரதி நடத்திவரும் மருத்துவமனைக்கு சென்ற லட்சுமி, பாரதியை பார்த்து உங்க கூடவே இருக்கணும் தோணுது பாரதி அங்கிள் என்று தெரிவித்து, பாரதியின் கையால் உணவும் உட்கொள்கிறார்.
இந்த நிலையில், விஜய் டிவி தற்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கான புது ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் பாரதி உடன் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்பொழுது லட்சுமி பாரதியை பார்த்து உங்கள அப்பான்னு கூப்டுக்கவா..? என்று கேட்கிறார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பாரதி பேச்சு வராமல் திக்கி திணறுகிறார். மீண்டும் பேச்சை தொடர்ந்த லட்சுமி, எங்க அம்மா ஹேமாக்கு சமையல் செஞ்சு தரதுனால சமையல் அம்மான்னு கூப்பிடுரா. எனக்கு உடம்பு சரியேயில்லைனா நீங்கதான் மருந்து, மாத்திரை தரீங்க. அதனால உங்கள டாக்டர் அப்பான்னு சொல்லுறேன் என்று கூற, அதேபோல், ஹேமாவும் நானும் அப்ப டாக்டர் அப்பான்னுதான் கூப்பிடுவேன் என்று தெரிவிக்கிறார். தொடர்ந்து, ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் சேர்ந்து 'டாக்டர் அப்பா', 'டாக்டர் அப்பா' என்று கத்த, ஒரு கட்டத்தில் பாரதி சரி என்று சொல்கிறார் அதோடு ப்ரோமோவும் முடிவடைகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்