மேலும் அறிய

மீண்டும் மீண்டுமா? பாரதி கண்ணம்மாவில் மீண்டும் அதே ட்விஸ்ட்.. ப்ரோமோவை கலாய்க்கும் ரசிகர்கள்..

பாரதியும், கண்ணமாவும் சேர்வதுபோல் ஒரு டிவிஸ்ட் வைத்தாலும் இனி தமிழக ரசிகர்கள் நம்ப மாட்டார்கள், இதுவும் ஏமாற்று வேலையாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் நம்ப மாட்டார்கள் என கருத்து நிலவுகிறது.

கண்ணம்மா இன்னும் 4 நாள்களில் என் கணவர் யார்? என்பது குறித்து தெரிவித்துவிடுவதாக  புதிய ப்ரோமா ஒன்று வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இன்னும் எத்தனை முறை இருவரும் இணைவதுபோல் காட்டி ஏமாற்றப்போகிறீர்கள் என ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்.

விஜய் டிவியின் ப்ரைம் சீரியலான பாரதி கண்ணம்மாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஆனால் சமீப காலங்களாக அய்யோ இந்த சீரியல்ல எப்ப முடிக்கப்போகிறீர்கள்? என்று ரசிகர்களையே கேட்கும் அளவிற்கு அவர்களை எரிச்சல் அடையச்செய்வதாக சீரியலில் கதைக்களம் அமைத்துவருகிறது. சமூகத்தில் தாய் இல்லாமலும், கருப்பாகவும் இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடங்கி, எதிர்பாராதவிதமாக நடைபெறும் திருமணம் போன்று கதைக்களம் விறுவிறுப்பாக சென்றது.

இந்நிலையில் தான் டாக்டர் பாரதியின் தோழி வெண்பா, பாரதியை ஒருதலையாக காதலித்துவந்த நிலையில், அவரை அடைந்தே தீர வேண்டும் என்பதற்காக பல பொய்களை அடுக்கிக்கொண்டே சென்றார். அதில் ஒன்று தான் இதுவரை சீரியலில் பூதாகரமாக வெடிப்பதற்கும், முக்கிய கதைக்களமாகவும் அமைந்துள்ளது. “ அது பாரதிக்கு குழந்தைக்கு பிறக்கும் வாய்ப்பு இல்லை என்பது தான்“. ஆனால் எப்படி கண்ணம்மா கர்ப்பமானார் என்பதில் ஆரம்பித்த பிரச்சனைதான் 8 ஆண்டுகளாக நீடிப்பதாக அமைந்துள்ளது.

மீண்டும் மீண்டுமா? பாரதி கண்ணம்மாவில் மீண்டும் அதே ட்விஸ்ட்.. ப்ரோமோவை கலாய்க்கும் ரசிகர்கள்..

தன்னுடைய நடத்தையைச் சந்தேகிக்கும் பாரதியை விட்டு கண்ணம்மா பிரிந்து வாழ்கிறார். இரண்டு குழந்தைகளைப் பெற்ற நிலையில், அவளுக்கே தெரியாமல் ஒரு குழந்தை பாரதி வீட்டில் வளர்கிறது. ஏதோ ஒரு சூழலில் தன் குழந்தை தான் பாரதி வீட்டில் வளரும் ஹேமா என்று தெரிந்தபோதாவது, உண்மை தெரியவந்து சீரியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அந்நேரத்தில் தான் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி சீரியலில் இருந்து விலகினார். இதனையடுத்து மீண்டும் முதலிலிருந்து வருவதுபோல் ரசிகர்கள் நினைக்கத்தொடங்கிவிட்டனர்.

புதிய கண்ணம்மாவின் வருகைக்குபிறகு தான் , விவாகரத்துக்கு கேட்டு கோர்ட்டுக்கு போன நிலையில் தான் இருவரும் சேர்ந்துவாழ வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது இருவரும் இணைவதுபோல கதைக்களம் கொண்டுசெல்லப்பட்டது. இதனிடைய தோழி வெண்பா, தனது வீட்டிற்கு செய்த துரோகத்தை அறிந்துகொண்டு அவளைவிட்டு விலகிவிடுகிறார் பாரதி. இதனால் நிச்சயம் இருவரும் இணைந்து விடுவார்கள் என்ற ஏக்கத்தில் பார்த்த ரசிகர்களுக்கு வெறுப்புதான் வந்தது. இப்பவும் இருவரும் இணைவது போன்ற கதையில்லை.  

இந்நிலையில் தான் அடுத்த வார எபிசோடுக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் கண்ணாம்மாவின் நலம் விரும்பியாகவும், அண்ணனாக வரும் ஆட்டோக்காரர் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிக்கு வருகிறார் கண்ணம்மா. அப்போது சந்தோசமாக வாழும் ஒருவர் தான் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்த வேண்டும் என கொஞ்சம் ஏளனமாகப் பேசுகிறார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணம்மா இன்னும் 4 நாள்களில் எனது பிறந்தநாள் வருகிறது. அப்போது தனது மகளின் அப்பா யார்? என்று சொல்கிறேன் எனவும், இதைக்கேட்ட லட்சுமி மிகவும் சந்தோஷப்படுவதாக ப்ரோமோ முடிகிறது.

இந்த ப்ரமோவைப் பார்த்த ரசிகர்கள், “ஏற்கனவே இன்னும் 5 நாள்கள் என்று சொல்வது போலவும்,  பாரதி கண்ணம்மாவை ஏற்றுக்கொள்ள கண்டிசன் போட்டீர்கள். அதுவே என்ன ஆச்சுன்னு தெரியல என கலாய்த்து வருகின்றனர்.  மேலும் தன் குடும்ப வாரிசை கொல்ல நினைத்தவள் என்றும் அவள் செய்த தவறை உடனே கண்டுபிடித்து  வெண்பாவை வெறுக்கிறார் பாரதி. ஆனால் பல முறை நான் குற்றமில்லாதவர் என நிரூபிக்க முயலும் கண்ணம்மாவை ஏன் பாரதி நம்பவில்லை என்பது போன்ற கமென்ட்ஸ்களை ரசிகர்கள் தெறிக்க விடுகின்றனர்.

மீண்டும் மீண்டுமா? பாரதி கண்ணம்மாவில் மீண்டும் அதே ட்விஸ்ட்.. ப்ரோமோவை கலாய்க்கும் ரசிகர்கள்..

ஏம் மொக்கை கதைகளுக்கு இத்தனை ஆண்டுகள் ஏன் வாய்ப்பு தருகிறீர்கள்? எனவும் கேட்டுள்ளனர். இனிமேல் பாரதியும், கண்ணமாவும் சேர்வதுபோல் ஒரு டிவிஸ்ட் வைத்தாலும் இனி தமிழக ரசிகர்கள் நம்ப மாட்டார்கள், இதுவும் ஏமாற்று வேலையாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் நம்ப மாட்டார்கள் என கருத்து நிலவுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget