Thalapathy 67 Update: 1940-களின் கேங்ஸ்டர்.. லோகேஷ் யூனிவர்ஸில் விஜய்.. வெளியானது தளபதி 67 அப்டேட்..!
விஜய் 67 படத்தின் சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
விஜய் 67 படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் விஜய் நடிக்கும் 67-வது படத்தை இயக்க இருக்கிறார்.
View this post on Instagram
இந்தப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடத்தின் இறுதியில் தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில் இந்தப்படம் குறித்தான சில சுவாரஸ்ய தகவல்களை PinkVilla இணையதளம் வெளியிட்டு இருக்கிறது. அந்தத் தகவல்களின்படி, “தளபதி 67 என்று அழைக்கப்படும் இந்தப்படத்தில் நடிகர் விஜய் 40 களில் வரும் கேங்ஸ்டர் வேடத்தில் வருகிறாராம். ஃப்ளாஷ் பேக்கில் வரும் காட்சிகளில் இளவயது விஜயை பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது.
பெரும்பான்மையான காட்சிகள் 40 களில் நடப்பது போலத்தான் காட்சிப்படுத்த பட இருக்கிறது. அதே போல விஜய் இந்தப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் பாட்ஷா படத்தில் ரஜினி வருவது போல வர இருக்கிறாராம். விஜயும் அவரின் இன்னொரு பக்கத்தை இந்தப்படத்தில் பார்க்க ஆவலாக இருக்கிறாராம்.
கேங்கஸ்டர்கள் மற்றும் ஏஜண்டுகளை வைத்து தனது யூனிவர்ஸை லோகேஷ் கட்டமைத்து வரும் நிலையில், இந்தப்படத்தின் வாயிலாக விஜயை அதற்குள் கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறாராம். கைதி, விக்ரம் படத்தில் நடித்த நடிகர்களை இந்தப்படத்திலும் நடிக்க வைப்பதற்கான வேலைகள் போய்க்கொண்டிருக்கிறதாம். அதற்காக லோகேஷ் பிற தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தில் ஸ்கிரிப்டை லாக் செய்வதற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறாராம்.
இந்தப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டியோ நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த யூனிவர்ஸில் இன்னொரு முக்கியமான கேரக்டரை உள்ளே கொண்டவர திட்டம் இருப்பதாகவும், அதில் ஹிந்தியில் உள்ள பிரபல நடிகரை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.