Leo Song: ‘லியோ’ பாடல் காப்பியா.. வெளிநாட்டு இசையமைப்பாளர் எழுப்பிய கேள்வி.. சர்ச்சையில் சிக்கிய அனிருத்!
லியோ படத்தில் இடம்பெற்ற ஆர்டினரி மேன் பாடல் நேற்று இணையதளத்தில் வெளியாகிய நிலையில் வேறொரு பாடலில் இருந்து இந்தப் பாடல் காப்பியடிக்கப்பட்டுள்ளதாக இணையதளத்தில் சர்ச்சை உருவாகியுள்ளது.
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகியது. விஜய், த்ரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
லியோ வசூல்
லியோ திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.148 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களின் வசூல் குறித்த தகவல்களை தயாரிப்பு நிறுவனம் அறிவிக்காமல் இருப்பது படம் குறித்தான சர்ச்சைகளுக்கு மேலும் இடம் கொடுத்துள்ளது.
லியோ பாடல்கள்
லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது என்றாலும் படத்தில் அனிருத் இசையில் அமைந்த பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. முன்னதாக வெளியிடப்பட்ட நான் ரெடி, பேட் ஏஸ், அன்பெனும் ஆயுதம் முதலிய பாடல்களைத் தவிர்த்து வெளியிடப்படாமல் படத்தில் சில பாடல்கள் படத்தில் இடம்பெற்றிருந்தன. அந்த வகையில் வில்லன் யாரு என்கிற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் பாடலை சக்திஸ்ரீ கோபாலன் அனிருத் உடன் இணைந்து பாடியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று லியோ படத்தில் அனைவரையும் கவர்ந்த ஆர்டினரி மேன் என்கிற ஆங்கிலப் பாடல் வெளியிடப் பட்டது. சமூக வலைதளங்களில் இந்தப் பாடல் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டு வருகிறது. நிகிதா காந்தி இந்தப் பாடலை பாடியிருக்க, ஹைசன்பர்க் என்பவர் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார்.
As you all asked, here is #OrdinaryPerson from #Leo 😀😀😀https://t.co/dxG8o6LVj6
— Anirudh Ravichander (@anirudhofficial) October 23, 2023
🎙️ @NikhitaGandhi
🖋️ #Heisenberg
Thalapathy @actorvijay @Dir_Lokesh @trishtrashers @7screenstudio @Jagadishbliss @SonyMusicSouth
காப்பியடிக்கப் பட்டதா ?
What is this man @anirudhofficial ???#Leo #OrdinaryMan pic.twitter.com/2KYmN3JokZ
— Flash⚡ (@funnuku) October 24, 2023
அனிருத்தின் இசை பொதுவாகவே பல ஆங்கிலப் பாடல்களின் சாயலில் இருப்பதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இப்படியான நிலையில் லியோ படத்தின் ஆர்டினரி மேன் பாடலின் தொடக்கம் புகழ்பெற்ற வெப் சீரிஸான பீக்கி ப்ளைண்டர்ஸின் இசையின் சாயலில் இருபபதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
மேலும் பீக்கி ப்ளைண்டர்ஸ் தொடருக்கு இசையமைத்த ஓட்னிகா என்கிற இசையமைப்பாளரையும் டேக் செய்திருந்தனர். இந்தப் பாடலுக்கான உரிமத்தை தன்னிடம் யாரும் கேட்கவில்லை என்றும், தன்னுடைய அனுமதி இல்லாமல் இந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் ஓட்னிகா தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இணையதளத்தில் பெறும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க : Thalapathy 68: “பிரஷாந்த் முதல் பிரபுதேவா வரை” .. “தளபதி 68” படத்தில் இணைந்த பிரபலங்கள்.. முழு விபரம்..!