மேலும் அறிய

Thalapathy 68: “பிரஷாந்த் முதல் பிரபுதேவா வரை” .. “தளபதி 68” படத்தில் இணைந்த பிரபலங்கள்.. முழு விபரம்..!

தளபதி 68 படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. 

தளபதி 68 படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. 

ஏஜிஎஸ் நிறுவனம்  தயாரிப்பில் நடிகர் விஜய் தனது 68வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இன்றைய தினம் விஜயதசமியை முன்னிட்டு வீடியோ வெளியாகியுள்ளது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் மிக முக்கிய பிரபலங்கள் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். 

பிரஷாந்த் 

தமிழ் சினிமா ரசிகர்களால் டாப் ஸ்டார் என்றழைக்கப்பட்டவர் பிரஷாந்த். விஜய், அஜித் போன்ற இன்றைய முன்னணி நடிகர்களுக்கு முன்னால் அறிமுகமாகி 90களின் காலக்கட்டத்தில் இவர்களுக்கே சவால் விட்டவர். நடுவில் தமிழ் சினிமாவில் சின்ன பிரேக் எடுத்து கொண்டாலும் தெலுங்கு சினிமாவில் நடித்து வந்தார். மீண்டும் 2016க்கு பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கிய பிரஷாந்த், முதல்முறையாக விஜய் உடன் இணைந்து நடிக்கவுள்ளார். கண்டிப்பாக ஃபவர்புல் கேரக்டர் அவருக்காக காத்திருக்கிறது என்பது உறுதியாகி விட்டது. 

மைக் மோகன்

தமிழ் சினிமா ரசிகர்களால் வெள்ளிவிழா நாயகன் என கொண்டாடப்பட்டவர் “மைக்” மோகன். 80களின் காலக்கட்டத்தில் தொட்டதெல்லாம் வெற்றி என சொல்லியடித்த மோகன் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்தார். ஆனாலும் மீண்டும் தான் நடிப்பேன் என ரசிகர்களுக்கு தெரிவித்த நிலையில் மிகப்பெரிய கம்பேக் ஆக தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார். 

மீனாட்சி சௌத்ரி 

நடப்பாண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை படத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடித்தவர் மீனாட்சி சௌத்ரி. இவர்  விஜய் படத்தில் ஹீரோயினாக தேர்வாகி உள்ளதன் மூலம் கவனம் ஈர்த்துள்ளார். 

லைலா 

1999 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தவர் லைலா. இவர் சிரிப்புக்கும், குறும்புத்தனமான நடிப்புக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். மீண்டும் அவரை திரையில் பார்க்க மாட்டோமா என பலரும் நினைத்த நிலையில் கடந்தாண்டு கார்த்தி நடித்த சர்தார் படத்தின் மூலம் ரீ -எண்ட்ரீ கொடுத்தார். லைலா முதல்முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது 

சினேகா 

லைலாவை போலவே 2000 ஆம் காலக்கட்டத்தில் அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானவர் சினேகா. விஜய் நடித்த வசீகரா படத்தில் ஜோடியாக நடித்திருப்பார். இப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியான நிலையில் கிட்டதட்ட 19 ஆண்டுகள் கழித்து விஜய் படத்தில் சிநேகா நடிக்கவுள்ளார். 

பிரபுதேவா

விஜய் அறிமுகமான காலக்கட்டத்தில் ஹீரோவாக எண்ட்ரீ கொடுத்தார் நடன இயக்குநர் பிரபுதேவா. மிகப்பெரிய அளவில் வலம் வந்த அவர், பின்னர் இயக்குநராக களம் கண்டு வெற்றி பெற்றார். நடிகர் விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு என இரண்டு படங்களை கொடுத்துள்ளார். பிரபுதேவா மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

ஜெயராம் 

ஹீரோ, காமெடியன், வில்லன் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் தனது அபார நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ஜெயராம் துப்பாக்கி படத்துக்குப் பின் மீண்டும் விஜய்யுடன் நடிக்கவுள்ளார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் 2கே கிட்ஸ்கள் மத்தியிலும் ஜெயராம் மிகவும் பிரபலமானார். 

வெங்கட் பிரபு & கோ

வெங்கட் பிரபு படங்களில் நடிப்பார்கள் என சில நடிகர்களை நாம் முன்கூட்டியே கணித்து விடலாம். அந்த வகையில் நடிகர்கள் வைபவ், பிரேம்ஜி அமரன், அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் இணைந்துள்ளார்கள். மேலும் அஜ்மல் அமீர், விடிவி கணேஷ் ஆகியோரும் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தைரியமிருந்தால் அண்ணாசாலை பக்கம் வரட்டும்: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
தைரியமிருந்தால் அண்ணாசாலை பக்கம் வரட்டும்: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
Trump Vs Biden: இந்திய தேர்தலில் ஜோ பைடன் தலையிட்டாரா.? ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு...
இந்திய தேர்தலில் ஜோ பைடன் தலையிட்டாரா.? ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு...
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
IND vs BAN: அர்ஷ்தீப்சிங்கிற்கு கல்தா! பவுலிங்கில் மிரட்டும் இந்தியா! தத்தளிக்கும் நாகின் பாய்ஸ்!
IND vs BAN: அர்ஷ்தீப்சிங்கிற்கு கல்தா! பவுலிங்கில் மிரட்டும் இந்தியா! தத்தளிக்கும் நாகின் பாய்ஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தைரியமிருந்தால் அண்ணாசாலை பக்கம் வரட்டும்: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
தைரியமிருந்தால் அண்ணாசாலை பக்கம் வரட்டும்: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
Trump Vs Biden: இந்திய தேர்தலில் ஜோ பைடன் தலையிட்டாரா.? ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு...
இந்திய தேர்தலில் ஜோ பைடன் தலையிட்டாரா.? ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு...
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
IND vs BAN: அர்ஷ்தீப்சிங்கிற்கு கல்தா! பவுலிங்கில் மிரட்டும் இந்தியா! தத்தளிக்கும் நாகின் பாய்ஸ்!
IND vs BAN: அர்ஷ்தீப்சிங்கிற்கு கல்தா! பவுலிங்கில் மிரட்டும் இந்தியா! தத்தளிக்கும் நாகின் பாய்ஸ்!
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
INDvsBAN: மிரட்டும் ரோகித் பாய்ஸ்! இந்தியா - வங்கதேச போட்டியை நேரலையில் எப்படி பார்ப்பது?
INDvsBAN: மிரட்டும் ரோகித் பாய்ஸ்! இந்தியா - வங்கதேச போட்டியை நேரலையில் எப்படி பார்ப்பது?
Annamalai on 2026 Election: தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.