மேலும் அறிய

காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

தன்னுடன் வந்த காதலியை திட்டமிட்டு பனிமலையில் தனியாக தவிக்கவிட்டு, உறைந்து உயிரிழக்கச் செய்த கொடூர காதலனின் சம்பபம் ஆஸ்திரியாவில் அரங்கேறியுள்ளது.

காதலனால் ஏமாற்றப்பட்டு மோசமான முறையில் உயிரிழந்த பெண்ணின் மறைவிற்கு உலகம் முழுவதும் இருந்து இரங்கல்கள் குவிந்து வருகின்றன.

 உறைந்து உயிரிழந்த பெண்:

மலையேறும் பழக்கம் கொண்ட காதலனால் திட்டமிட்டு கிராஸ்க்லாக்னர் மலையில் கைவிடப்பட்டு, பனியில் உறைந்து உயிரிழந்த பெண் ஆஸ்திரியாவைச் சேர்ந்த 33 வயதான கெர்ஸ்டின் கர்ட்னர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சால்ஸ்பர்க்கைச் சேர்ந்த அந்த பெண் சமூக ஊடகங்களில் தன்னை "குளிர்காலக் குழந்தை" என்றும் "மலையேறும் நபர்" என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு ஜனவரியில், கர்ட்னர் ஆஸ்திரியாவின் மிக உயரமான சிகரமான கிராஸ்க்லாக்னரில், அனுபவம் வாய்ந்த வழிகாட்டியான 39 வயதான தனது காதலர் தாமஸ் பிளாம்பெர்கருடன் ஏறியது கர்ட்னரின் கடைசி பயணமாக மாறியுள்ளது.

என்ன நடந்தது?

திட்டமிட்டதை விட இரண்டு மணி நேரம் தாமதமாக இந்த ஜோடி மலையேற்றத்தைத் தொடங்கியது, மேலும் -20°C வரை குறைந்த வெப்பநிலை மற்றும் சூறாவளி காற்று உள்ளிட்ட தீவிர நிலைமைகளை எதிர்கொண்டுள்ளது. கர்ட்னர் சோர்வடைந்து, தாழ்வெப்பநிலைக்கு ஆளாகி, உச்சியை அடைய 150 அடி மட்டுமே இருந்த சூழலில் தன்னிலையை இழந்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது,”அதிகாலை 2 மணியளவில் உதவிக்காகச் செல்ல பிளாம்பெர்கர் கர்ட்னரை பாதுகாப்பற்ற முறையில் விட்டுச் சென்றதாகவும், ஆனால் குளிரில் இருந்து பாதுகாக்க அவசர போர்வைகள் அல்லது பிவோவாக் சாக்கைப் பயன்படுத்தவில்லை என்றும் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மீட்பு பணிக்கான உதவிகளை தொடர்பு கொள்ள அவர் மணிக்கணக்கில் காத்திருந்ததாகவும், முதல் அழைப்பிற்குப் பிறகு தனது தொலைபேசியை சைலண்டில் வைத்திருந்ததாகவும், அவரைத் தொடர்புகொள்வதற்கான கூடுதல் முயற்சிகளைத் தவறவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன. சில மணிநேரங்களுக்குப் பிறகு ஒரு ஹெட் டார்ச் மட்டுமே மலையின் உச்சியில் நகர்ந்ததை வெப்கேம் படங்கள் படம்பிடித்தன என வழக்கறிஞர்கள் விலக்கியுள்ளனர்.

பனியில் உறைந்து உயிரிழந்த பெண்

மறுநாள் காலை வரை பலத்த காற்று காரணமாக மீட்புக் குழுவினரால் கர்ட்னரை அடைய முடியாத சூழலில், அவரது இருப்பிடத்தை அடைந்த போது அந்த பெண் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து பிளாம்பெர்கர் மீது அலட்சியத்தால் ஏற்பட்ட மனிதக் கொலைக்கு குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாமஸ் காதலியைப் போலல்லாமல், ஏற்கனவே உயரமான மலைகளின் மீது ஏறி  மிகவும் அனுபவம் வாய்ந்தவராகவும், சுற்றுப்பயணத்தைத் திட்டமிட்டிருந்தவராகவும் இருந்ததால், அவர் சுற்றுப்பயணத்தின் பொறுப்பான வழிகாட்டியாகக் கருதப்பட வேண்டும் என அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணை:

உள்நோக்கத்துடன் தனது காதலியை மலை உச்சியில் தனியாக தவிக்க விட்டாரா? உண்மையிலேயே கடும் பனியாமல் வழிதவறி பிரிந்துவிட்டனரா? என்பன போன்ற கோணங்களில் போலீசார் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Embed widget