Upenna movie : உப்பென்னா பட சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி... வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
உப்பென்னா கதை திருடப்பட்டதாக கூறி அதை தமிழில் ரீமேக் செய்ய படக்கூடாது என விஜய் சேதுபதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிபதியின் விசாரணைக்கு பிறகு விஜய் சேதுபதி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி, விஜய் சேதுபதி நடிப்பில் 2021-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படம் 'உப்பெனா'. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் விஜய் சேதுபதியின் விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியானது. இந்த விவகாரம் சார்பில் விஜய் சேதுபதிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
உப்பென்னா திருடப்பட்டது என வழக்கு பதிவு :
உப்பென்னா திரைக்கதை திருடப்பட்டதாக கூறி அதை தமிழில் ரீமேக் செய்ய படக்கூடாது என அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் இயக்குனர் டல்ஹவுசி பிரபு. உலக மகன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் டல்ஹவுசி பிரபு, உப்பென்னா திரைப்படத்தின் கதை திருடப்பட்டு தெலுங்கில் உருவாகியுள்ளது. அதனால் அப்படத்திற்கு கிடைத்த வருமானத்தில் 50 சதவீதத்தை தன்னிடம் கொடுக்க வேண்டும் என உத்தரவளிக்க வேண்டும் மேலும் தமிழில் அப்படத்தை ரீ மேக் செய்ய நடிகர் விஜய் சேதுபதிக்கு தடை உத்தரவு விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார் தேனியை சேர்ந்த இயக்குநர் டல்ஹவுசி பிரபு.
#Upenna -A mixed bag. A romantic drama set in coastal andhra with a cliched love story about a poor girl-rich guy divided by caste, class and patriarchy. The movie is elevated greatly by its strong performances, aesthetic visuals, lovable music & a bold moving final 20 mins. pic.twitter.com/wYAkAemr4B
— The Illusionist (@JamesKL95) February 13, 2021
தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு :
நீதிபதி சரவணன் முன்வைக்கப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதியிடம் விஜய் சேதுபதி இந்த உப்பென்னா திரைப்படத்தின் ரீமேக் உரிமையை நான் பெறவில்லை. அதை வாங்கியதற்கு எந்த ஒரு ஆதாரமும் மனுதாரர் சார்பில் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விஜய் சேதுபதி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இரு தரப்பையும் விசாரித்த நீதிபதி விஜய் சேதுபதி மீது தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த உத்தரவு பிறப்பித்தார்.