Vijay Sethupathi: இங்க சர்வைவ் பண்றது ரொம்ப கஷ்டம்: அந்த பாரம் என்னோட குழந்தைக்கு வேணாம் - விஜய் சேதுபதி நெகிழ்ச்சி
Vijay Sethupathi : நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய மகன் நடிப்பில் உருவாகி வரும் 'ஃபீனிக்ஸ் வீழான்' படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் மகன் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார்.
![Vijay Sethupathi: இங்க சர்வைவ் பண்றது ரொம்ப கஷ்டம்: அந்த பாரம் என்னோட குழந்தைக்கு வேணாம் - விஜய் சேதுபதி நெகிழ்ச்சி Vijay Sethupathi emotional speech about his son entry into cinema filed at Phoenix teaser launch Vijay Sethupathi: இங்க சர்வைவ் பண்றது ரொம்ப கஷ்டம்: அந்த பாரம் என்னோட குழந்தைக்கு வேணாம் - விஜய் சேதுபதி நெகிழ்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/17/fc3bdf0f694117cb08bd286952cee3401718588836130224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி என பல மொழி படங்களிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டும் விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வாரம் வெளியான 'மகாராஜா' திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது அவரின் 50வது படம் என்பது மேலும் ஸ்பெஷல். வெளியான இரண்டு நாட்களில் 15 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி ஒரு பக்கம் தமிழ் சினிமா ரசிகர்களை தன் கைப்பிடிக்குள் அடக்கி வைக்க தற்போது அவரின் மகன் சூர்யாவும் வெள்ளித்திரையில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார். பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ஃபீனிக்ஸ் வீழான்'. ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் ட்ராமாவாக உருவாகியுள்ள இப்படத்தின் அனல் தெறிக்கும் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய மகன் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார்.
என்ன பண்ணனும்? எப்படி பண்ணனும்? என்ன நடக்கணும் என எதுவுமே திட்டம் போடல. 'சங்கத் தமிழன்' படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நானும் அனல் அரசு மாஸ்டரும் பேசிக்கொள்வோம். அடுத்த தடவை என்னோட பையனை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டிட்டு போனப்போ அவன் கிட்ட ஒரு கதை சொன்னாரு. நான் கூட ஏதோ ஒப்பீனியன் கேட்க கதை சொல்றாரு என நினைச்சேன். அதுக்கு அப்புறம் ஒரு நாள் நான் ஷூட்டிங் போன போது உங்க பையன் இந்த கதைக்கு கரெக்ட்டா இருப்பானான்னு கேட்டாரு. உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே மாஸ்டர். அவன் கிட்ட பேசி பாருங்கன்னு சொன்னேன்.
"அவன் சினிமாவுல வருவான்னு நான் துளியும் நினச்சு பார்க்கவே இல்லை. ஏன்னா இந்த இண்டஸ்ட்ரில சர்வைவ் பண்றது ரொம்ப கஷ்டம். இங்க தாக்கு பிடிக்குறது ரொம்ப கஷ்டம் என நான் பல தடவை அவன் கிட்ட பேசி இருக்கேன். இங்க பிரஷர் ஹேண்டில் பண்றது ரொம்ப கஷ்டம். அது என்னோட குழந்தைக்கு எவ்வளவு பாரமா இருக்கும் என்பது எனக்கு தெரியும். ஆனா அவனுக்கு இது தான் பிடிச்சு இருந்துது. அனல் அரசு மாதிரி அற்புதமான ஒரு மனிதரோடு படத்துல அவன் அறிமுகமாவது எனக்கு ரொம்ப சந்தோஷம். இந்த படத்தோட டீசர் பார்த்து நான் மிகவும் அகமகிழ்ந்தேன்.
இதுவரைக்கும் நான் அவனோட 19 ஃபாதர்ஸ் டே கொண்டாடி இருக்கேன். ஆனா இந்த முறை இது ஒரு அற்புதமான ஃபாதர்ஸ் டே. வாழ்க்கை பல அற்புதங்களை என்னுடைய வாழ்க்கையில் நிகழ்த்தி இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று. இதை நிகழ்த்தி காட்டிய அனல் அரசு மாஸ்டருக்கு என்னுடைய நன்றிகள்" என பேசி இருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)