மேலும் அறிய

“காந்தி டாக்ஸ்” டிரெய்லர் வெளியீடு: வார்த்தைகளை விட வலிமையாக பேசும் மௌனம்

Zee Studios, Kyoorius Digital Pvt Ltd, Pincmoon Meta Studios மற்றும் Movie Mill Entertainment இணைந்து தயாரித்துள்ள, “காந்தி டாக்ஸ்”  திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக  வெளியிடப்பட்டுள்ளது.

முழுமையாக வசனங்கள் இல்லாமல் உருவாகியுள்ள இந்தப்படம், சினிமா மரபுகளை உடைத்து, துணிச்சலான உள்ளடக்கம் மற்றும் கதைசொல்லலை நம்பும் தயாரிப்பாளர்களின் உறுதியை வலுவாக பிரதிபலிக்கிறது.

காந்தி டாக்ஸ் டிரெய்லர்

ஒலி, ஆரவாரம், பிரம்மாண்டம் ஆகியவற்றால் நிரம்பிய இன்றைய சினிமா சூழலில், “காந்தி டாக்ஸ் ” தன்னடக்கத்துடனும் நம்பிக்கையுடனும் வருகை தருகிறது. வசனங்கள் இன்றி, உணர்ச்சியை தூண்டும் காட்சிகள், பதற்றம் நிறைந்த மௌனம், ஆழமான உணர்வுகள் ஆகியவற்றின் மூலம் டிரெய்லர் பலவற்றை சொல்லுகிறது. காதுகளால் மட்டும் அல்ல, பார்வையாளர்களின் உள்ளுணர்வுகளாலும் கேட்க வைக்கும் ஒரு சினிமா அனுபவமாக  இது அமைந்துள்ளது.

விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி, சித்தார்த் ஜாதவ் ஆகிய முன்னணி  நட்சத்திரங்களின் , நுணுக்கமும் உள்ளார்ந்த நடிப்பும், உணர்வுப்பூர்வமான மோதல்களும் நிறைந்த சுவடுகளை, டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. வார்த்தைகள் இல்லாததால், முகபாவனைகளும் நடிகர்களின் இருப்புமே கதையின் மையமாக இருக்கின்றது.

படம் குறித்து விஜய் சேதுபதி 

“வார்த்தைகள் இன்றி உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற சவாலை ‘காந்தி டாக்ஸ்’ எனக்கு அளித்தது. மௌனமே மிக வலுவான உரையாடலாக மாறும் அரிய படம் இது.” என்றார். 

படம் குறித்து அரவிந்த்சாமி 

“சத்தத்தில் மூழ்கிய இந்த உலகில், மௌனம் இன்னும் மனசாட்சியை உலுக்கும் என்பதை ‘காந்தி டாக்ஸ்’ நினைவூட்டுகிறது. இங்கே வார்த்தைகள் விலகி நிற்க, உண்மை அமைதியாக நடந்து வருகிறது. ரஹ்மானின் மேதைமை மிக்க  இசையே இத்திரைப்படத்தின் மொழியாகிறது.” என்றார். 

படத்தின் உணர்ச்சிப் பிணைப்பை பற்றி அதிதி ராவ் ஹைதாரி கூறியதாவது.., 
“வார்த்தைகளை விட  உணர்வுகள் தான் இதில்  என்னை அதிகம் நெகிழ வைத்தது. மௌனமும், நுணுக்கமான உணர்வுகளும் ஒன்றோடொன்று அழகாக இணையும் படம் இது.”

சித்தார்த் ஜாதவ் கூறியதாவது

“உரையாடலின்றி இவ்வளவு வலிமையாக உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு படத்தின் அங்கமாக இருப்பது உண்மையிலேயே சிறப்பு. வார்த்தைகளைத் தாண்டி பேசும் சினிமாவின் உலகமொழியை இது மீண்டும் நினைவூட்டுகிறது.”

கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், இப்படத்திற்கு, இசை ஜாம்பவான் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இசையே கதையின் குரலாக மாறி, ஒவ்வொரு மௌனத்தையும், பதற்றத்தையும், சொல்லப்படாத எண்ணங்களையும் உணர்ச்சிபூர்வமாக உயர்த்துகிறது.

இசையின் உச்சமான ஏ ஆர் ரஹ்மான் கச்சேரிக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக, துணிச்சலான மற்றும் மரபு மீறிய ஒரு முயற்சியாக உருவாகியுள்ள இப்படத்தின்  டிரெய்லரை வெளியிட்டு, பாரம்பரிய சினிமா மற்றும் இசையின் சங்கமத்தை  கொண்டாடியுள்ளது படக்குழு. இந்த தனித்துவமான விளம்பர அணுகுமுறை, படத்தின் தத்துவத்தை, ஆழமான, அனுபவபூர்வமான மற்றும் கலை நோக்கத்தை பிரதிபலிக்கிறது.

“காந்தி டாக்ஸ்”  மூலம், Zee Studios  மற்றும் தயாரிப்பாளர்கள் விதிமுறைகளைத் தாண்டி, நுணுக்கமான நடிப்பைக் கொண்டாடும் மற்றும் இந்திய சினிமாவின் எல்லைகளை முன்னுக்கு எடுத்துச் செல்லும் படங்களுக்கான தங்கள் ஆதரவை  உறுதிப்படுத்தியுள்ளனர்.

2026 ஜனவரி 30 அன்று “காந்தி டாக்ஸ்”  திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget