13 years of Vettaikaran : விஜய்யின் வழக்கமான மாஸ் மசாலா கான்செப்ட்: வேற.. வேற... வேட்டைக்காரன்: 13 வருட வேட்டை...!
விஜய் - அனுஷ்கா நடிப்பில் 2009ம் ஆண்டு வெளியான 'வேட்டைக்காரன்' திரைப்படம் இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் நடிகரான விஜய்க்கு ஏராளமான ரசிகர் கூட்டம் உள்ளது. அவரின் படங்கள் வெளியாவதை ஒரு திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் வில்லு, குருவி திரைப்படங்களை தொடர்ந்து 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'வேட்டைக்காரன்' படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகளை கடந்துவிட்டது.
வழக்கமான மசாலா மாஸ் கதை :
இயக்குனர் பிரபு சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த மாஸ் மசாலா திரைப்படமான வேட்டைக்காரன் வழக்கமான மசாலா படங்களுக்கு தேவையான அம்சங்களை பூர்த்தி செய்தது. இயக்குனர் தரணியிடம் உதவி இயக்குனராக பணிபுந்தவர் பிரபு சிவன். வழக்கமாக வில்லன்களை அடித்து துவைத்து எடுக்கும் கதாபாத்திரமாக விஜய் ஒரு போலீசாக வேண்டும் என்பதை தனது லட்சியமாக கொண்டவருக்கு ரோல் மாடல் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் தேவராஜாக நடித்த தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரி. தனது இலட்சியத்தை நிறைவேற்றுகிறாரா, ரவுடிகளை பழிவாங்குகிறாரா என்பது தான் படத்தின் கதை.
Most Underrated Album #Vettaikaran ❤️
— 🆂🅴🅱🅰🆂 3:16🥃🍾 (@UNCR0WNEDKlNG) April 29, 2021
All Songs are Ultimate 🔥#Master @actorvijay @vijayantony pic.twitter.com/PJi6Jhr3RC
எதிர்பார்த்த அளவுக்கு இல்லை :
வேட்டைக்காரன் படத்தில் விஜய் ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார். வழக்கம் போல அவரின் அழகு ரசிக்கும் படி இருந்தது. அழகால் அசர வைத்த அனுஷ்கா நடிப்பில் கோட்டை விட்டு விட்டார். படத்தில் காமெடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்பதால் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை. விஜய் ஆண்டனி இசையமைத்த இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார் கோபிநாத். பாடல்கள் சிறப்பாக இருந்தன. விஜய்யும் அனுஷாகாவின் பாட்டியும் செய்யும் காமெடி சற்று ரசிக்கும் படி இருந்தது. பிளாஷ்பேகுகளாக சொல்லியே படத்தின் பாதி கதையை ஓட்டிவிட்டார்கள்.
View this post on Instagram
சன் பிக்ஸர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இப்படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் பாக்குழுவினர் தரப்பில் இருந்து படத்தை ஆஹா ஓஹோ என புகழ்த்தார்கள்.