LEO : ஜம்மு காஷ்மீர் சாலையில் விஜய் - லோகேஷ்... கண்டுபிடித்த ரசிகர்கள்: வைரலாகும் வீடியோ!
ஜம்மு காஷ்மீரில் லியோ படப்பிடிப்பில் விஜய் - லோகேஷ் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் நடிக்கும் 67வது படம் லியோ. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரில், தற்போது பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், இந்த படத்தில் பனிப்பொழிவு தொடர்பான காட்சி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சாலையில் நடிகர் விஜய்யும், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வருகிறது.
இது படத்திற்கான காட்சி எடுக்கும் போது, எடுக்கப்பட்ட வீடியோ என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வீடியோவை,விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
லியோ:
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - தயாரிப்பாளர் லலித் குமார் மீண்டும் 2வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்த படத்திற்கு ‘லியோ’ என பெயரிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, இயக்குநர் மிஷ்கின், நடிகர் மன்சூர் அலிகான், மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ், இயக்குநர் கௌதம் மேனன், நடிகர் அர்ஜுன் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
காஷ்மீர்:
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு காஷ்மீரில் நடந்து வரும் லியோ படப்பிடிப்புத் தளத்தில் இருந்து படக்குழுவினருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய், இயக்குநர் மற்றும் நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் இருந்தனர்.
அர்ஜுன் விளக்கம்:
இந்நிலையில் லியோ படத்தில் தன்னுடைய கேரக்டர் எப்படியிருக்கும் என்பதை நடிகர் அர்ஜுன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அதில், “லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறேன். அவர் இயக்கிய கைதி மற்றும் விக்ரம் படங்களை பார்த்துள்ளேன். ரொம்ப வித்தியாசமா கதையை சொல்லக்கூடிய ஒரு இயக்குநர். அந்த படத்துல நான் நடிக்கிறேன் சொல்றப்ப பெருமையா தான் இருக்குது. அதேபோல் நான் விஜய் கூட இதுவரை நடிச்சது இல்ல. இந்த படத்துல நடிக்கிறது ஆர்வமா இருக்குது. அதேபோல் கதையும் வித்தியாசமான கதையாக அமைந்துள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் லியோ படப்பிடிப்பில் விஜய் - லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

