Throwback | ”விஜய்க்கு உங்க ஆஃபிஸ்லயாவது வேலை கொடுங்க “ - பிரபல தயாரிப்பாளரிடம் கேட்ட விஜயின் தந்தை SAC !
இந்த சூழலில் பட்டிமன்ற பேச்சாளர் லியோனி தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தன்னிடம் விஜய் குறித்து பகிர்ந்த சில சுவாரஸ்யங்களை பகிர்ந்திருக்கிறார்.
இன்றைக்கு முன்னணி நடிகர்களாக இருக்கும் அனைத்து நடிகர்களுமே ஆரம்ப காலத்தில் இன்னல்களையும் அவமானங்களையும் சந்தித்தவர்கள்தான். கடின உழைப்பும் , சினிமா மீது இருக்கும் அதீத ஈடுபாடும் இருந்தால் போதும் என்றோ ஒருநாள் இன்றைக்கு கோல் ஓச்சியிருக்கும் நடிகர்களை போல நாமும் வருவோம் என பல நடிகர்கள் ஓடிக்கொண்டிருக்கிறனர். இன்று தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமையாக உருவெடுத்திருக்கிறார் நடிகர் விஜய். என்னதான் அவர் அப்பா சினிமாவில் முக்கியமான இயக்குநராக இருந்த காலக்கட்டமாக இருந்தாலும் , விஜய்க்கு அங்கீகரம் அத்தனை எளிதாக கிடைக்கவில்லை. அதற்காக பல போராட்டங்களை விஜய் சந்தித்திருந்தாலும், மகனுக்காக ஆரம்ப நாட்களில் தொடர்ந்து வாய்ப்புகள் கேட்டு போராடியவர் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயை எப்படி சந்திரசேகர் வளர்த்தார் என்பது குறித்து கங்கை அமரன் சமீபத்தைய நேர்காணல் ஒன்றில் விளக்கியிருந்தார். மேலும் தாய், தந்தை மீதே வழக்கு பதிவு செய்ததற்கு நேரடியாகவே விஜய்க்கு கண்டனங்களையும் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் பட்டிமன்ற பேச்சாளர் லியோனி தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தன்னிடம் விஜய் குறித்து பகிர்ந்த சில சுவாரஸ்யங்களை பகிர்ந்திருக்கிறார்.
View this post on Instagram
அதில் ”விஜக்கு வந்து ஆரம்ப கால படங்கள் அனைத்துமே சேவியர் பிரிட்டோதான் தயாரிச்சாரு. மூன்று படத்துக்கு பிறகு விஜயை ஒரு பெரிய ஹீரோவா கொண்டு வரனும்னு சந்திரசேகர் சார் கேட்டாரு. உடனே சேவியர் பிரிட்டோ , இல்லை வேண்டாம் மூன்று படங்களுமே நல்லா போகலைனு சொல்லிட்டாரு. உடனே SAC , உன் கம்பெனில ஒரு வேலையாவது கொடு விஜய்க்குனு சேவியர் கிட்ட கேட்க, உடனே இல்லை இல்லை..ஹீரோவாக மாத்துறேன்னு சொல்லிட்டு . செந்தூரப்பூவே ஸ்கிரிப்ட ரெடி பண்ணி , விஜயகாந்தை ஹீரோவா நடிக்க வச்சு. அதுல விஜயையும் நடிக்க வச்சாரு சேவியர் பிரிட்டோ " என சுவாரஸ்ய சம்பவத்தை நினைவு கூர்ந்திருந்தார் லியோனி
View this post on Instagram
Also Read | Etharkkum Thunindhavan Review: துணிந்து பார்க்கும் படமா எதற்கும் துணிந்தவன்? உள்ளதை உள்ளபடி சொல்லும் விமர்சனம்!