Thalaiva Day: தலைவா படத்தின் 2 ஆம் பாகம்...கதை ரெடி...விஜய் முடிவு என்ன தெரியுமா?
தலைவா படத்தை வெளியிடக்கூடாது என மிரட்டல்கள் வந்தது. இதனால் இந்த பிரச்சனையை கொடநாட்டில் இருந்த ஜெயலலிதாவிடம் கொண்டு செல்ல படக்குழு திட்டமிட்டது.
விஜய் நடித்த தலைவா படத்தின் 2 ஆம் பாகம் உருவாகுமா என்பது குறித்து அப்படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய் ரசிகர்கள் மகிழும் வண்ணம் அப்டேட் கொடுத்துள்ளார்.
"AUG 9th"
— 💥 Rocky 💥 (@RakeshBR55) August 9, 2022
The hurdles faced by the #Thalaiva film, the suicide of a fan, and the video released by @actorvijay Annan requesting the government to release the film will always remain close to the hearts of all Thalapathy fans.#9YrsOfHistoricThalaivaa pic.twitter.com/nZAQxnhGTc
கடந்த 2013 ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய்,அமலா பால், சத்யராஜ், சந்தானம் உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘தலைவா’. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி ரிலீசானது. ஆனால் தலைவா படம் ரிலீசுக்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்தது. குறிப்பாக டைட்டிலின் கீழே “Time to lead" என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. விஜய்க்கு அரசியல் ஆர்வம் உள்ளதை வெளிப்படுத்து விதமாக இது அமைந்தது. இதனை ரசிகர்கள் கொண்டாட தொடங்கிய நிலையில் அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியதாக சொல்லப்பட்டது.
BB just miss, still #Thalapathy hits out of the park with his performance 💥 Starting the day Thalaivaa Track list 🙌 #Thalaiva#Thalaivaa#ThalaivaDay#9yrsofhistoricThaliavaa #9YRSTHALAIVAADAY pic.twitter.com/DSZRyM1Bhe
— Siva (@SSR_ECR) August 9, 2022
படத்தை வெளியிடக்கூடாது என மிரட்டல்கள் வந்தது. இதனால் இந்த பிரச்சனையை கொடநாட்டில் இருந்த ஜெயலலிதாவிடம் கொண்டு செல்ல படக்குழு திட்டமிட்டது. ஆனால் அவரோ தன்னை சந்திக்க முயன்ற விஜய் உள்ளிட்ட படக்குழுவினரை சந்திக்கவே இல்லை. இதனால் தமிழகத்தில் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தான் வெளியானது. அதற்குள் பிற மாநிலங்களில் படம் வெளியாகி படம் பற்றி விமர்சனம் பரவ தலைவா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
ஆனாலும் விஜய் ரசிகர்களுக்கு இப்படம் நெருக்கமான ஒன்றாகவே இன்றளவும் உள்ளது. படத்தில் இடம்பெற்ற தளபதி..தளபதி பாடலை கேட்டாலே விஜய்க்கு எவ்வளவு அரசியல் ஆர்வம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதில் அதிருப்தியடைந்த விஜய் அப்போதைய ஆளும் அதிமுக அரசை கிடைத்த இடங்களில் எல்லாம் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் இன்று தலைவா படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே தலைவா-2 உருவாகுமா என்பது பற்றி அப்படத்தின் ஏ.எல்.விஜய் தகவல் தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில், 10 வருடம் கழித்து வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் அணிந்தாலே தலைவா லுக் என யாரும் சொன்னாலே எனக்கு சந்தோஷம் தான். படத்திற்கு பின்னணியில் விஜய் சார் பண்ண சப்போர்ட் நம்பவே முடியாதது. இன்னைக்கு கூட எங்க போனாலும் தலைவா-2 எப்போ என்றே கேட்கிறார்கள்.
எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்குது. விஜய் சாருக்கு தெரியும் அது எப்ப பண்ண வேண்டும். எப்ப என்னை கூப்பிடணும் என அவருக்கு தெரியும். ஒருமுறை இதுபற்றி பேசியிருக்கோம். அப்போது விஜய் சார் பார்க்கலாம் என தெரிவித்தார். கதைக்கான ஐடியா ரெடியா இருக்கு..பார்க்கலாம்.. என ஏ.எல்.விஜய் தெரிவித்துள்ளார்.