மேலும் அறிய

Vijay Birthday LIVE: லியோ இரண்டாவது லுக்...வெளியான புது போஸ்டர்!

Vijay Birthday LIVE Updates: நடிகர் விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரது பிறந்தநாள் ரசிகர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் காணலாம்.

Key Events
Vijay Birthday LIVE Updates Thalapathy Vijay 49th Birthday Celebration Photos Images Videos Vijay Makkal Iyakkam Vijay Birthday LIVE: லியோ இரண்டாவது லுக்...வெளியான புது போஸ்டர்!
நடிகர் விஜய்

Background

Happy Birthday Vijay: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது திரைப்பயணம் பற்றி காணலாம். 

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்

1974 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி பிறந்த ஜோசப் விஜய், தனது 10வது வயதில் தனது தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய வெற்றி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்தப் படத்தில் ஹீரோவான விஜயகாந்தின் சிறுவயது கேரக்டரில் தான் விஜய் நடித்திருந்தார். தொடர்ந்து எஸ்.ஏ.சி., இயக்கிய வெற்றி, நான் சிகப்பு மனிதன், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு ஆகிய படங்களில் விஜய் நடித்திருப்பார். 

’இதெல்லாம் ஒரு மூஞ்சியா’ முதல் முன்னணி நடிகர் வரை 

1992 ஆம் ஆண்டு விஜய் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் வெளியானபோது ’இதெல்லாம் ஒரு மூஞ்சியா’ என விஜய்யை கழுவி ஊற்றாதவர்கள் இல்லை. தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்தாலும், முதல் பிளாக்பஸ்டர் ஹிட் படம் அமைய 4 ஆண்டுகள் காத்திருந்தார். 1996 ஆம் ஆண்டு விஜய் நடித்த பூவே உனக்காக படம் வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. இதனைத் தொடர்ந்து அடுத்து சில தோல்வி படங்கள், லவ் டுடே போன்ற நடிப்புக்காக பாராட்டைப் பெற்ற திரைப்படங்கள் என விஜய்க்கு வெளியானது. 

மீண்டும் 1998 ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை படம், விஜய் படம் என்றால் குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியதோடு, அவருக்கு பெண் ரசிகைகள் கிடைக்க காரணமாக அமைந்தது. பின்னர் விஜய் கேரியர் துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, திருமலை, கில்லி, சச்சின், திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி, நண்பன், துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல், சர்கார்,பிகில், மாஸ்டர், பீஸ்ட், வாரிசு என பல வெற்றிப் படங்களை வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கொடுத்து தமிழ் சினிமாவின் ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ என்னும் அளவுக்கு கொண்டாடப்படுகிறார். 

குழந்தைகளின் ஃபேவரைட் 

டான்ஸ் புயல் என கொண்டாடப்படும் அளவுக்கு விஜய் நடனத்தில் பின்னுவார். அவரது ஒவ்வொரு படத்திலும் என்ன நடன அசைவுகளை அவர் வெளிப்படுத்துகிறார் என காத்திருக்கும் ரசிகர்கள் ஏராளம். கடைசியாக வெளியான மாஸ்டர், பீஸ்ட், வாரிசு என ஒவ்வொரு படங்களிலும் வயது ஏறுமா? என கேட்கும் அளவுக்கு மிரட்டியிருப்பார். குறிப்பாக வாரிசு படத்தில் ரஞ்சிதமே பாடலில் இடைவிடாது 1.30 நிமிடங்கள் நடனம் ஆடி தியேட்டரை ஆட்டம் காண வைத்திருப்பார். 

இதேபோல் பாடகர் விஜய்யும் ரசிகர்களுக்கு என்றும் பேவரைட் தான். இதுவரை 66 படங்களில் நடித்துள்ள அவர் 35 பாடல்கள் பாடியுள்ளார். தற்போது வெளியாகவுள்ள லியோ படத்திலும் ‘நா ரெடி’ பாடலை பாடியுள்ளார்.

இப்படி தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் நடிகர் விஜய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..!

12:44 PM (IST)  •  22 Jun 2023

Vijay Birthday LIVE: லியோ இரண்டாவது லுக்...வெளியான புது போஸ்டர்!

இன்று மாலை லியோ படத்தின் நா ரெடி பாடல் வெளியாகவுள்ள நிலையில், லியோ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

11:43 AM (IST)  •  22 Jun 2023

Vijay Birthday LIVE: நடிகர் விஜய் பிறந்தநாள்.. வீடியோ வெளியிட்டு நடிகர் பிரேம் வாழ்த்து

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Embed widget