மேலும் அறிய

FlashBack: 2002 இதே நாளில் ஆக்‌ஷன் ரூட் எடுத்த விஜய்.. வில்லன் ரூட் எடுத்த அஜித்.. இருவரையும் தூக்கி சாப்பிட்ட விஜயகாந்த்!

பகவதி, வில்லன் உள்பட 2002ஆம் ஆண்டு தீபாவளிக்கு மொத்தம் 8 படங்கள் திரையரங்குகளில் வெளியாகின.

2002 தீபாவளி

2002ஆம் ஆண்டு தீபாவளி அன்று மொத்தம் 8 படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. விஜய் நடித்த பகவதி, அஜித் நடித்த வில்லன், விஜயகாந்த் நடித்த ‘ரமணா’, சிம்பு நடிப்பில் உருவான காதல் அழிவதில்லை, சேரன் நடித்த சொல்ல மறந்த கதை, ஆண்டிப்பட்டி அரசம்பட்டி, படைவீட்டு அம்மன், கேம். இந்த எட்டுப் படங்களில் பகவதி மற்றும் வில்லன் ஆகிய இரு படங்களுக்கு வழக்கம்போல் போட்டி நிலவியது. ஆனால் நடந்தது வேறு!

வில்லன்

2002ஆம் ஆண்டு கே. எஸ் ரவிகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வில்லன். அஜித் குமார், மீனா, கிரண், ரமேஷ் கண்ணா, விஜயன், உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். வித்யாசாகர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். அஜித் குமார் இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். வில்லன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

கதை

ஷிவா (அஜித் குமார்) , தங்கம் (மீனா) மணி ( ரமேஷ் கண்ணா) ஆகிய மூவரும் ஒரு குழுவாக பெரிய பெரிய திருட்டுகளில் ஈடுபடுகிறார்கள்.  வெளி உலகத்திற்கு வேறு  வேறு தொழில்கள் செய்யும் இவர்கள் இந்தத் திருட்டை செய்வதற்கான எந்தக் காரணங்களும்  தெரிவதில்லை. வெளி உலகத்திற்கு பஸ் கண்டக்டராக இருக்கும் ஷிவாவின் மேல் காதலில் விழுகிறார் லாவண்யா. இப்படியான நிலையில் ஷிவா செய்யும் திருட்டுக்களை கண்டுபிடிக்கும் லாவண்யா உண்மையை தெரிந்துகொள்கிறார்.

விஷ்ணு மூளை வளர்ச்சி குறைபாடு இருப்பதால் அவனை ஒரு ஆசிரமத்தில் சேர்க்க முடிவு செய்வதால் ஷிவா மற்றும் அவனது இரட்டை சகோதரனான விஷ்ணு ஆகிய இருவரும் தங்களது வீட்டை வீட்டு ஓடி வருகிறார்கள்.  தன்னுடை சகோதரனைப் போல் உடல்ரீதியிலான குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆதரவளிபபதற்காக இந்தத் திருட்டுக்களை செய்கிறார் ஷிவா. இதில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதே படத்தின் மீதிக் கதை.

பகவதி

விஜய் , ரீமா சென், வடிவேலு , ஜெய், மோனிகா உள்ளவர் பகவதி படத்தின் நடித்திருந்தனர். ஏ.வெங்கடேசன் இந்தப் படத்தை இயக்கி தேவா இந்தப் படத்திற்கு இசைமைத்தார். டீக்கடை வைத்திருக்கும் விஜய் தன்னுடைய தம்பியின் குழந்தையைக் காபாற்ற எப்படி மிகப்பெரிய கேங்ஸ்டராக மாறுகிறார் என்பதே பகவதி படத்தின் கதை.

குஷி,  பத்ரி, ஃப்ரண்ட்ஸ், ப்ரியமானவளே, ஷாஜஹான் உள்ளிட்ட படங்களில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்த விஜய், பகவதி படத்தில் முழுவதும் மாஸான ஒரு நடிகராக நடித்தார். அதே நேரத்தில் வில்லன் படத்தில் இரட்டை கதாப்பாத்திரங்களில் அஜித் நடித்தார். முழு படத்திலும் ஹீரோவாக இல்லாமல் முதல் பாதி முழுவதும் நெகட்டிவ் கதாபாத்திரமாகவே இந்தப் படத்தில் அஜித் நடித்திருந்தது ரசிகர்களைக் கவர்ந்தது.

மாஸ் காண்பித்த விஜயகாந்த்!

அதே நேரத்தில் விஜய்யை ரொமான்டிக் நடிகராக மட்டுமே பார்த்து வந்த ரசிகர்களுக்கு திடீரென்று அவரை மாஸான ஹீரோவாக ஏற்றுக்கொள்வதில் ஒரு சிறிய தயக்கம் இருக்கவே செய்தது. அவரது முந்தைய படங்களைக் காட்டிலும் இந்தப் படம் போதுமான வெற்றியைத் தரவில்லை என்பதே நிஜம். 

இரண்டு படங்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது என்றாலும் 2002 தீபாவளியில் வெற்றி பெற்றது என்னவோ ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ரமணா திரைப்படம் தான். சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அப்போது வளர்ந்து வரும் நடிகர்களாக விளங்கிய விஜய் - அஜித் படங்களை புரட்சிக் கலைஞர், கேப்டன் என்றெல்லாம் கொண்டாடப்பட்ட விஜயகாந்த்தின் ரமணா படம் பின்னுக்குத் தள்ளி தீபாவளி ரேஸில் வெற்றி பெற்றது.

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget