Nayanthara : இது சிவனின் குடும்பம்.. விக்னேஷ் சிவன் பகிர்ந்த பொங்கல் விழா க்ளிக்..
“பொங்கலோ பொங்கல். உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்கள் அனைவருக்கும் இவ்வுலகில் உள்ள எல்லா மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துக்கள்.” - விக்னேஷ் சிவன்
இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது இன்ஸ்டா பக்கத்தில் பொங்கலையொட்டி அவரின் குடும்பத்துடன் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மலையாளத்தில் ஒரு சில படங்களை நடித்த பின்,ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நயன். அந்த படத்தை தொடர்ந்து, சந்திரமுகி, கஜினி, யாரடி நீ மோகினி, சத்யம், வில்லு, ஆதவன், பாஸ் என்கிற பாஸ்கரன் என பல படங்களில் நடித்தார்.
இதற்கு இடையே பல தெலுங்கு படங்களில் நடித்த இவருக்கு, 2013 ஆம் ஆண்டில் வெளிவந்த “ராஜா ராணி” கம்-பேக் படமாக அமைந்தது.ராக்கெட் வேகத்தில் சர சரவென பல படங்களில் கமிட்டாகி நடிக்க தொடங்கினார்.
அத்துடன் பெண்களை கதை மாந்தராக வைத்து எடுக்கும் படங்களில் நடிக்க துவங்கினார். அறம், இமைக்கா நொடிகள், ஐரா, மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், கனெக்ட் என பல படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் இருக்கும் மற்ற பெண்களுக்கு முன்னோடியாக மாறினார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன், 2015 ஆம் ஆண்டில் வெளியான நானும் ரவுடிதான் படத்தின் இயக்குநரான விக்னேஷ் சிவனை காதலிக்க ஆரம்பித்தார்.
இருவரில், யார் அவர்களின் காதலை முதலில் வெளிப்படுத்தினார்கள் என்பது தெரியாமல் இருக்கும் நிலையில், இருவருக்கும் திருமணமாகி ரெட்டை ஆண் குழந்தைகளே பிறந்துவிட்டது.வழக்கமாக நயனின் புகைப்படங்களை வெளியிடும் விக்னேஷ், குழந்தைகள் பிறந்தவுடன், அவரின் குடும்ப புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி, வண்ணமயமான போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவிற்கு பின்னால், சிவன் பார்வதியுடன் விநாயகர் மற்றும் முருகர் உள்ள படம் உள்ளது. இது சிவனின் குடும்பம், என்று விக்னேஷ் சிவன் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
View this post on Instagram
அத்துடன், “பொங்கலோ பொங்கல். உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்கள் அனைவருக்கும் இவ்வுலகில் உள்ள எல்லா மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துக்கள்.”
முன்னதாக இந்த ஜோடி, புத்தாண்டு பண்டிகையையொட்டி சென்னை எக்மோரில் இருக்கும் சாலையோர மக்களுக்கு பரிசுகளை கொடுத்தனர். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் காட்டுத்தீ போல் பரவியது. இதற்கு முன் ஜூன் மாதம் நடந்த இவர்களின் திருமண நிகழ்ச்சியையொட்டி, பல முதியோர்களுக்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் உணவு அளித்து உதவி செய்தனர். இவர்களின் இந்த செயலை நெட்டிசன்களும், பொது மக்களும் பாராட்டினர்.