Vidamuyarchi : விடாமுயற்சி படம் கைவிடப்பட்டுச்சா? அஜித்தின் மேனேஜர் சொன்ன பதில் இதுதான்..
நடிகர் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக பல தகவல்கள் பரவியதைத் தொடர்ந்து நடிகர் அஜித்தின் மேனேஜர் விளக்கமளித்துள்ளார்
ஒரு படத்திற்கு தங்களது உயிரை கொடுத்து நடிக்கிறார்கள். ஆனால் படம் டிராப் என்று சொல்லும்போது அனைவரும் வருத்தமடைகிறார்கள் என்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறியுள்ளர்.
விடாமுயற்சி
அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். த்ரிஷா நாயகியாக நடிக்க அர்ஜூன் , ஆரவ் உள்ளிட்டவர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மக்களவை தேர்தல் முடிந்து அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடரும் எண்ணத்தில் படக்குழு ஒரு சிறிய இடைவேளை எடுத்துக் கொண்டுள்ளது.
இதனிடையில் நடிகர் அஜித் குமார் தனது நண்பர்களோடு பைக்கில் பயணம் செய்து வருகிறார்.
விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதா?
விடாமுயற்சி படத்தின் டைட்டில் வெளியானதைத் தொடர்ந்து படம் குறித்து அடுத்த எந்த தகவலும் வெளியாகத காரணத்தினால் ரசிகர்கல் பெரும் விரக்தியில் இருந்து வந்தனர். படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடையாத நிலையில் அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் ‘குட் பேட் அக்லி’ வெளியிடப்பட்டது.
மேலும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பைத் தொடங்காமல் அஜித் சுற்றுலா சென்றது என பலவிதமான நிகழ்வுகள் சேர்ந்து ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக விடாமுயற்சி படம் கைவிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியாகின.
முன்னதாக விக்னேஷ் ஷிவன் இயக்கவிருந்த அஜித் படம் கைவிடப் பட்டதைப் போலவே இந்த படமும் ஏதோ கருத்து வேறுபாடால் பாதியிலேயே நின்றுவிட்டது என ரசிகர்கள் நம்பத் தொடங்கிவிட்டார்கள்.
படப்பிடிப்பின்போது விபத்து..
இப்படியான நிலையில்தான் நடிகர் அஜித் குமாரின் மேனேஜரான சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் அதிர்ச்சி தரும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவில் நடிகர் அஜித் ஓட்டிய கார் விபத்திற்கு உள்ளானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் படு வைரலானது, இந்த வீடியோவில் நடந்தது உண்மையான விபத்தா? அல்லது அது படப்பிடிப்பின் ஒரு அங்கமா? என்று குழப்பம் நிலவி வந்தது. இது தொடர்பாக சுரேஷ் சந்திரா தற்போது விளக்கமளித்துள்ளார்.
விடாமுயற்சி ரிலீஸ்
Glad that #AK and #Arav were safe after this accident! Looks scary #VidaaMuyarchi 🙏 pic.twitter.com/mHQIo7u9JU
— Rajasekar (@sekartweets) April 4, 2024
”கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் காட்சிப்படி அஜித் தனக்கு முன் செல்லும் காரை துரத்தி செல்ல வேண்டும். இந்த காட்சியை காருக்குள் ஒரு கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் வைத்து படம் பிடித்தோம் ஆனால் எதிர்பாராத விதமாக அவர் ஓட்டிய கார் சறுக்கி பள்ளத்தில் விழுந்துவிட்டது. உடனே மொத்த படக்குழுவினரும் ஓடியுள்ளார்கள். அஜித் சார் இருந்த கார் விபத்திற்கு உள்ளாகிவிட்டதாக எனக்கு இந்த செய்தி வந்தபோது நான் பயந்துவிட்டேன்.
அஜித் சார் ஃபோனில் என்னிடம் பேசின பிறகு நான் அமைதியானேன். அதேபோல் மருத்துவ பரிசோதனை செய்து எந்த அடியும் இல்லை என்ற பின்பே அஜித் மீண்டும் நடிக்க சென்றார். இந்த வீடியோவை இப்போது வெளியிட்டதற்கு பின் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு படத்திற்காக உயிரை கொடுத்து நடிக்கிறார்கள். ஆனால் படம் டிராப் என்று தவறான செய்திகள் பரவும்போது படக்குழு எல்லாரும் வருத்தமடைகிறார்கள்.
விடாமுயற்சி படம் சுமார் 60 சதவிகிதம் முடிவடைந்து விட்டது. அனிருத் ஒரு சில பாடல்களை கொடுத்த பின் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. வரும் அக்டோபர் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம் ” என்று சுரேஷ் சந்திரா கூறியுள்ளார்.