என்கவுண்டர் சரியா? மோதிக்கொள்ளும் ரஜினி, அமிதாப் பச்சன்.. வெளியானது வேட்டையன் டீசர்!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
த.செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , ரானா டகுபதி , ரித்திகா சிங் , மஞ்சு வாரியர் , துஷாரா விஜயன் , ரக்ஷன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய வேட்டையன்:
லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்று வருகிறது.
ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு ரஜினி நடித்து வரும் கூலி படத்தின் மீதுதான் ரசிகர்களுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்து வந்தது. வேட்டையன் படத்தைப் போறுத்தவரை அது என்ன மாதிரியான ஒரு படமாக இருக்கும் என்று இன்னும் உறுதியாக சொல்ல முடியவில்லை.
இப்படத்தின் இயக்குநர் த.செ ஞானவேல் முன்னதாக ஜெய் பீம் படத்தை இயக்கினார். மிகத் தீவிரமான அரசியல் பேசும் படத்தை இயக்கி பாராட்டுக்களைப் பெற்ற ஞானவேல் அடுத்தபடியாக சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தை இயக்கியுள்ளார்.
WATCHOUT! 🔥 The VETTAIYAN 🕶️ Prevue is Out Now! The hunt is ON! 💥
— Lyca Productions (@LycaProductions) September 20, 2024
▶️ https://t.co/U0ltfM0itE#Vettaiyan 🕶️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran… pic.twitter.com/pRr4JxJnEc
டீசரில் மிரட்டிய ரஜினி:
இதனால் தன்னுடைய அரசியல் கருத்துக்களையும் சூப்பர்ஸ்டாரின் மாஸையும் அவர் எப்படி இணைத்து ஒரு கமர்ஷியல் படத்தை கொடுக்கப்போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் மிக ஆவலாக காத்து வருகிறார்கள். படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் ஒருபக்கம் நடந்து வர இன்னொரு பக்கம் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை படிப்படியாக தொடங்கியுள்ளது படக்குழ.
சமீபத்தில் வெளியான மனசிலாயோ பாடல் இன்ஸ்டண்ட் ஹிட் அடித்து வைரலாகியுள்ளது. படத்தில் ஒவ்வொரு நடிகரின் கதாபாத்திரத்தைப் பற்றிய சிறு முன்னோட்ட வீடியோக்களை படக்குழு வெளியிட்டது. இதையடுத்து, டீசர் இன்று வெளியாகியுள்ளது.