Vettaiyan Actors Salary : யாருக்கு எத்தனை கோடி ? வேட்டையன் பட நடிகர்களின் சம்பளம் பற்றி தெரிந்துகொள்லலாம்
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தில் நடித்துள்ள அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர் ஆகியவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார்கள் எனபதைப் பார்க்கலாம்
வேட்டையன்
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த.செ ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , ரானா டகுபதி , துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அபிராமி , ரக்ஷன் உள்ளிட்டவகள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.வேட்டையன் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. என்கவுண்டர் கொலைகளை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைந்துள்ளது. வேட்டையன் பட நடிகர்களின் சம்பளம் குறித்தான தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்த்
வேட்டையன் படத்திற்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 125 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோலிவுட் நடிகர்களில் அதிக சம்பளம் பெறும் நடிகராக ரஜினி இருந்த நிலையில் தற்போது இந்த இடத்தை விஜய் பிடித்துள்ளார். விஜய் தற்போது நடிக்க இருக்கும் தளபதி 69 படத்திறாக 275 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
அமிதாப் பச்சன்
பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின் ரஜினியும் அமிதாப் பச்சனும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இப்படத்திற்காக அவர் ரூ 7 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம்
மஞ்சு வாரியர்
ரஜினிகாந்தின் மனைவியாக நடிகை மஞ்சு வாரியர் இப்படத்தில் நடித்துள்ளார். இதற்காக அவர் 2 முதல் 3 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஃபகத் ஃபாசில்
மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் கதையை கேட்ட ஃபகத் ஃபாசில் சம்பளமே இல்லாமல் நடிக்க தயார் என்று சொன்னதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால் ஃபகத் ஃபாசிலுக்கு இப்படத்திற்காக 2 முதல் 4 கோடி வரை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
ரானா டகுபதி
நடிகர் ரானா டகுபதி வேட்டையன் படத்திற்காக 5 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ரித்திகா சிங்
நடிகை ரித்திகா சிங் இப்படத்திற்காக 25 லட்சம் சமபளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
பின்குறிப்பு : மேற்குறிப்பிட்ட தகவல்கள் டைம்ஸ் ஆப் இந்தியா தளத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க : Thalapathy 69 : பட்டு வேட்டி சட்டையில் விஜய்... பிரம்ம்மாண்டமாக நடைபெற்ற தளபதி 69 படத்தின் பூஜை