வெற்றிமாறன் சிம்புவின் அரசன் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்...
Arasan Movie Shoot : வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் அரசன் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது

கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் சிம்புவின் அரசன் படப்பிடிப்பு இன்று கோவில்பட்டியில் துவங்கியுள்ளது. வடசென்னை கதையுலகின் ஒரு பகுதியாக உருவாகிறது அரசன் திரைப்படம். வடசென்னை படத்தில் நடித்த சமுத்திரகனி , கிஷோர் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். முதற்கட்டமாக சிம்புவின் இளம் பருவத்து காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
அரசன் படப்பிடிப்பு
அரசன் பட ப்ரோமோவில் நெல்சன் ஒரு சிறிய கேமியோவில் தோன்றியிருந்தார். இதன் காரணமாக, அவருக்கு திரைப்படத்திலும் ஒரு தனிப்பட்ட கதாபாத்திரம் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தபடியாக விஜய் சேதுபதி இப்படத்தில் இணைந்துள்ளது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது . வடசென்னை படத்தில் நடித்த கிஷோர் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் இந்த படத்திலும் இணைகிறார்கள். நாயகியாக சமந்தாவை தேர்வு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஒளிப்பதிவை வேல்ராஜ் மேற்கொள்கிறார்.
சிம்பு இந்த படத்தில் 25 மற்றும் 45 வயது என இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கவிருக்கிறார். இளமை தோற்றத்திற்காக வெற்றிமாறன் அவரிடம் சுமார் 12 கிலோ எடை குறைக்கச் சொன்னதாகவும், இதையடுத்து சிம்பு துபாயில் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு புதிய லுக்கிற்கு தயாராகினார்.
STR movie #arasan shooting in kovilpatti 💥💥💥
— kutty_ilavarasi (@kutty_ilavarasi) December 9, 2025
Movie oda first shooting ey enga area la tha mass la 😎 #simbu #vetrimaran
Enga street back side tha shoot 🥳🥳 pic.twitter.com/1p8UeJDk62





















