Selfie | ”நீங்க இல்லாத ஆடுகளம்..” : உதவி இயக்குநரின் முதல் பட போஸ்டரை வெளியிட்டு வெற்றிமாறன் நெகிழ்ச்சி..
ஜி.வி.பிரகாஷ் , கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை இயக்குகிறார் மதிமாறன்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இருக்கும் நடிகர் ஜீ.வி பிரகாஷ்குமார் . இவர் நடிப்பில் உருவாக இருக்கும் ‘செஃல்பி’ என்னும் புதிய படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கவுள்ளார். இந்த படத்தை கோலிவுட்டின் முன்ணனி இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்த மதிமாறன் என்பவர் இயக்க உள்ளார்.
மேலும் படத்தை கைப்புலி எஸ்.தாணுவின் ’வி கிரியேஷன்ஸ்’ தயாரிக்க உள்ளது. ஜி.வி பிரகாஷ் குமார் நடிப்பில் தாணு படத்தை தயாரிப்பது இதுவே முதல்முறை என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது செல்ஃபி படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை வெற்றிமாறன் தனது ஃபேஸ்புக் பக்கம் மூலமாக வெளியிட்டுள்ளார். அதில் “#Selfie படத்தின்முதல் தோற்றத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி மற்றும் ஆடுகள நாட்களில் என் நம்பிக்கைக்குரிய லெப்டினன்ட் மதிமாறனை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன். மதிமாறன் இல்லாத ஆடுகளம் திரைப்படம் நிறைவானதாக இருந்திருக்காது. மதி, உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ட்வீட் செய்துள்ள தயாரிப்பாளர் தாணு “பேராற்றலின் வடிவமான இயக்குநர் வெற்றிமாறனின் மாணவனாய் இன்று தனது பயணத்தை தொடங்கும் இயக்குநர் மதிமாறனின் "செல்ஃபி" திரைப்படத்தின் First Look-ஐ மகிழ்வோடு வெளியிடுகிறோம். திரையனுபவமாய் கொண்டாட, ஆர்ப்பரிக்க,ஆரவாரிக்க, உற்சாகிக்க,உங்கள் திரையரங்குகளில்.” என குறிப்பிட்டுள்ளார்
பேராற்றலின் வடிவமான இயக்குநர் @VetriMaaran மாணவனாய் இன்று தனது பயணத்தை தொடங்கும் இயக்குநர் @mathimaaran "செல்ஃபி" திரைப்படத்தின் First Look-ஐ மகிழ்வோடு வெளியிடுகிறோம். திரையனுபவமாய் கொண்டாட, ஆர்ப்பரிக்க,ஆரவாரிக்க, உற்சாகிக்க,உங்கள் திரையரங்குகளில். @DGfilmCompany #SelfieMovie pic.twitter.com/UdhSt67QVB
— Kalaippuli S Thanu (@theVcreations) September 12, 2021
நேற்று இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு “வெற்றியை தனது உழைப்பால் வென்றெடுக்கும் அகிலம் போற்றும் இயக்குநர் வெற்றி மாறன் , தனது பாசறையில் பயின்ற மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் First Look Poster-ஐ,நாளை காலை 11.24 மணிக்கு தனது FB பக்கத்தில் வெளியிடுகிறார் என குறிப்பிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் செஃபி போஸ்டரை வெற்றிமாறன் மற்றும் படக்குழுவினர் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். இதனை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்
Here is #Selfie .. Super happy to work with @theVcreations Thanu sir for the first time as lead . Watch out for this stunning debutant director @mathimaaran from the team of @VetriMaaran … thank u @menongautham .. @DGfilmCompany @VarshaBollamma @thangadurai123 @SonyMusicSouth pic.twitter.com/EaYNn6Wxo6
— G.V.Prakash Kumar (@gvprakash) September 12, 2021