இரண்டரை வருடங்கள் ஆகியும் யாரும் குடிபுகாத சுசாஷ்ந்த் சிங் ராஜ்புட்டின் வீடு.. இதையும் படிங்க..
இரண்டரை வருடங்கள் ஆகியும் இதுவரை சுஷாந்த் வாழ்ந்த வீட்டிற்கு யாரும் குடிவரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டரை வருடங்கள் ஆகியும் இதுவரை சுஷாந்த் வாழ்ந்த வீட்டிற்கு யாரும் குடிவரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2020ஆம் ஆண்டு ஜூன் 14ம் தேதி 34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது வீட்டில் இறந்து கிடந்தார். முதலில் அது தற்கொலை என்று கூறப்பட்டது. ஆனால், போகப் போக இந்த வழக்கு பல சிக்கல்களை சந்தித்த வண்ணம் இருந்தது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் அகால மரணம் இந்திய திரை ரசிகர்கள் அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எத்தனையோ படங்கள் நடித்திருந்தால் அவர் நடித்த MS Dhoni தான் மக்கள் மனதில் அவரை நீங்கா இடம் பிடிக்க வைத்தது.
ஆரம்பத்தில் போலீஸ் கையிலிருந்த இந்த வழக்கு பின்னர் சிபிஐ வசம் சென்றது. பாலிவுட் நடிகையும் சுஷாந்தின் காதலி என்று கூறப்பட்ட ரியா சக்ரபர்த்தி, சுஷாந்தின் நண்பர் சித்தார்த், அவரது சமையல்காரர் நீரஜ் மற்றும் திபேஷ் சாவந்த் ஆகியோரிடம் இருந்து சிபிஐ வாக்குமூலம் பெற்றது. சுஷாந்த் கொலை செய்யப்பட்டார் என்பதை அறிய ஒரு வல்லுநர் குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவிற்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறைத் தலைவர் மருத்துவர் சுதிர் குப்தா தலைமை தாங்கினார். அவர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாக அறிக்கை கொடுத்தார்.
View this post on Instagram
இந்நிலையில் சுஷாந்த் சிங் வாழ்ந்த வீடு இன்னும் யாரும் குடிவராமல் உள்ளது. அதன் உரிமையாளர் ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் மூலம் கிழக்கு முகம் கொண்ட அந்த கடற்கரை பக்க வீடு மாதம் ரூ.5 லட்சம் வாடகைக்கு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
சுஷாந்த் சிங் நடித்த படங்களில் மனதை ஈர்த்தப் படங்கள் தான் அதிகம். அவருடைய சில படங்களும் அவர் ஏற்று நடித்த சில கதாபாத்திரங்கள் பற்றியும்.
Kai Po Che படத்தில் இஷான் பட்:
காய் போ சே படத்தின் மூலம் சுஷாந்த் சிங் ராஜ்புத் பாலிவுட்டில் அறிமுகமானாது. அவர் அந்தப் படத்தில் கனவுகள் நிறைவேறாத கிரிக்கெட்டராக நடித்திருப்பார். அவர் அந்தப் பாத்திரத்தில் கனகச்சிதமாகப் பொருந்தியிருப்பார்.
MS Dhoni: The Untold Story படத்தில் மகேந்திர சிங் தோனி:
முதல் படம் ஆசை நிறைவேறாத கிரிக்கெட்டர் என்றால் இரண்டாம் படத்தில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான தோனியின் கதாபாத்திரம். பயோபிக் படத்தில் கிரிக்கெட் களத்திலும், காதல் களத்திலும் சுஷாந்த் சிங் ராஜ்புத் சென்சுரி அடித்தார். அதன்பின்னர் அவரை தோனியின் நிழலாகவே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.
Kedarnath படத்தில் மன்சூர் கான்:
2018ல் அபிஷேக் கபூர் இயக்கத்தில் வெளியானது கேதார்நாத் திரைப்படம். தோனி பட வெற்றி தந்த புகழ் பாலிவுட்டில் சுஷாந்தை ஜொலிக்கச் செய்திருந்தது. இந்நிலையில் கேதார்நாத் படத்தில் சாரா அலி கானுடன் ஜோடி சேர்ந்தார் சுஷாந்த் சிங். அந்தப் படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
Chhichhore படத்தில் அனிருத் பதக்:
சிச்சோர் படத்தில் அனிருத் பதக் என்ற கதாபாத்திரத்தில் சுஷாந்த் நடித்திருப்பார். அதுதான் அவரது பெஸ்ட் எனக் கருதப்படுகிறது. அது ஒரு பீரியட் ஃபில்ம். 1990களில் நடப்பது போல் ஆரம்பித்து 2019ல் வந்து சேரும் கதை. ரசிகர்களை அது வெகுவாகக் கவர்ந்தது. உண்மையான நண்பர்களை போற்றும் படம்.
Dil Bechara படத்தில் மேனி
தில் பேச்சரா படத்தில் மேனி என்ற கதாபாத்திரத்தில் சுஷாந்த் நடித்திருப்பார். அறிமுக இயக்குநர் முகேஷ் சப்ரா இயக்கிய படம் இது. ஆனால், சுஷாந்தின் மரணத்துக்குப் பின்னர் தான் இப்படம் வெளியானது. 2012ல் வெளியான ஜான் க்ரீனின் நாவலை அடிப்படையாகக் கொண்டது இப்படம். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் முழுமையாக வாழ்வது எப்படி என நடித்துக் காட்டிவிட்டு தன் நிஜத்தில் வாழ்க்கையை முடித்துக் கொண்ட சுஷாந்த் குறுகிய காலமே திரையில் இருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளார்