மேலும் அறிய

Thalapathy 68: தெறி..! வயதை குறைக்கும் நடிகர் விஜய்.. எதிர்கால தொழில்நுட்பத்தில் தளபதி-68.. வெங்கட் பிரபு டிவீட்

நடிகர் விஜயின் தளபதி 68 படம் தொடர்பாக இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நடிகர் விஜயின் தளபதி 68 படம் தொடர்பாக இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு சமூக வலைதளங்கில் வைரலாகியுள்ளது.

வெங்கட் பிரபு ட்வீட்:

இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “”எதிர்காலத்திற்கு வரவேற்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். அதோடு, உடல் முழுவதையும் ஸ்கேன் செய்யும் 360 டிகிரியிலும் கேமராக்கள் பொருத்தப்பட்ட ஒரு தொழில்நுட்ப குடுவைக்குள், நடிகர் விஜய் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும், அந்த தொழில்நுட்பம் தொடர்பான போஸ்டர் ஒன்றை நடிகர் விஜய் பார்ப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது விஜய் ரசிகர்களால் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. தளபதி 68 படத்தில், டி-ஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் இளம் வயது விஜயை காண்பிப்பதற்காக தற்போது அவரது உடல் முழுவதும் ஸ்கேன் செய்யபப்ட்டுள்ளது.

கலிபோர்னியாவில் டீ-ஏஜிங்:

கலிபோர்னியாவில் உள்ள USC ICT எனும் ஒரு கல்லூரியில் தான் 3டி முறையில் டீ-ஏஜிங் எனப்படும்,  இந்த வயதை குறைக்கும் தொழில்நுட்ப பணிகள் தளபதி 68 பணிக்காக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவத்தின் நிதியுதவி பெற்று செயல்படும் இந்த கல்லூரி, அவதார் , ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் ஆகிய படங்களில் பணியாற்ற் ஆஸ்கர் விருதுகள் வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிறுவனம் தளபதி 68 மூலம் முதன்முறையாக இந்திய சினிமாவிற்குள் நுழைகிறது. முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்த்லும் இதே தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஷங்கர் வெளியிட்ட புகைப்படமும் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்

நடிகர் விஜய்யின் 68 வது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குவதன் மூலம் இயக்குநர் வெங்கட் பிரபு முதல்முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளார். தளபதி 68 படத்தில் விஜய் இரட்டை  கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் ஜெய் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாகவும் அபர்ணா தாஸ் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் அவரது உடல் ஸ்கேன் சோதனை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக விஜய் - லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
Embed widget