Vendhu Thanindhathu Kaadu: வெந்து தணிந்தது காடு... தியேட்டரை தெறிக்கவிடுவாரா சிம்பு? ரீசண்ட் போஸ்டர்
Vendhu Thanindhathu Kaadu Release Date: வெந்து தணிந்தது காடு திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம், வெந்து தணிந்தது காடு.இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. இதன்காரணமாக இந்தப் படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர்.
Wishing @RedGiantMovies_ on their 15 years anniversary from team #VendhuThanindhathuKaadu & @VelsFilmIntl
— Vels Film International (@VelsFilmIntl) July 26, 2022
Also a special poster from #VTK is here.@SilambarasanTR_ @menongautham @arrahman @IshariKGanesh @Udhaystalin @ikamalhaasan #AamirKhan @iamactorvarun @thinkmusicindia pic.twitter.com/yfNHn5ORds
இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளதாக படக்குழு மீண்டும் அறிவித்து ஒரு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது.
படக்குழு சார்பாக படத்தின் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் ரிலீஸ் தேதியினை வெளியிட்டார். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் உருவாகியிருக்கும் மூன்றாவது திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இதற்கு முன்னர் விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்கள் வெளியாகி இருந்தது.
View this post on Instagram
இந்த இரண்டு படங்களும் சூப்பர் டூப்பட் ஹிட் அடித்த படங்கள். அதன் பாடல்களும் ஹிட், இன்றைக்கும் பலரது ரிங் டோனாக இருக்கிறது. இக்கூட்டணியில் உருவாகியிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15ல் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சித்தி இத்னானி, ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்சலினா ஆப்ரஹம் முதலானோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். முன்னதாக விக்ரமின் கோப்ரா திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்