Cinema Round-up : அஜித்துடன் மோதுவது உறுதி..மறுமணம் செய்யும் மீனா; ஜெய்பீம் 2 உறுதி! - கோலிவுட் ரவுண்ட் அப்!
ஹாலிவுட்டின் அவதார் முதல் கோலிவுட்டின் வாரிசு பொங்கல் வரை..சலசலப்பான டாப் 5 சினிமா செய்திகள் உள்ளே.!
துணிவுடன் போட்டி போடும் வாரிசு
பொங்கலுக்கு ‘வாரிசு’ படம் ரிலீசாகும் என பட அறிவிப்பு வெளியான போதே கூறப்பட்ட நிலையில், அதன்பிறகு ரிலீஸ் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகாததால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். அத்துடன் அஜித்தின் துணிவு படமும், அன்றைய தினமே வெளியாவதால் வாரிசுக்கு திரையரங்குகள் கிடைப்பதிலும் சிக்கல் நீடிப்பதாக தகவல் வெளியானது. இந்த குழப்பத்தை தீர்த்து வைக்கும் வகையில் ‘வாரிசு’ படக்குழு நேற்று நள்ளிரவு படம் நிச்சயம் பொங்களுக்கு வெளியாகும் என கூறி போஸ்டரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
View this post on Instagram
இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு இப்படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய் பீம் 2
"#JaiBhim 2 will definitely happen. The plan is on" says Co Producer @rajsekarpandian at #IFFI53Goa table talks. @Suriya_offl #Suriya42 🔥 pic.twitter.com/AtCcqWe3R8
— Suriya Fans Club (@SuriyaFansClub) November 29, 2022
சமீபத்தில் நடந்த IFFI விழாவில் ஜெய் பீம் படத்தின் குழுவினர்கள் அனைவரும் பேட்டி கொடுத்து வந்தனர். அந்தவகையில், இதில் பங்குபெற்ற இணை தயாரிப்பாளர் ராஜசேகர் முக்கியமான ஒரு செய்தியை வெளியிட்டார். “ ஜெய் பீம் படத்தின் 2 ஆம் பாகத்திற்கான திட்டங்கள் உள்ளன. முன்னாள் நீதிபதி சந்துரு இது போன்ற பல முக்கியமான வழக்குகளை கையாண்டிருக்கிறார். எனவே கட்டாயமாக இரண்டாம் பாகம் தயாராகும்” என அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
மீனாவிற்கு மறுமணம்
நடிகை மீனாவின் குடும்பத்தினர் அவரை மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாகவும், ஆரம்பத்தில் அதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை மீனா பின்னர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி மீனா தரப்பில் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. மேலும் அவர் மறுமணம் செய்யப்போகும் நபர் மீனா குடும்பத்திற்கு நீண்ட கால நண்பர் என்றும் கூறப்படுகிறது.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் தூதுவர்
An open letter to #NadavLapid following his criticism of #KashmirFiles. It’s not in Hebrew because I wanted our Indian brothers and sisters to be able to understand. It is also relatively long so I’ll give you the bottom line first. YOU SHOULD BE ASHAMED. Here’s why: pic.twitter.com/8YpSQGMXIR
— Naor Gilon (@NaorGilon) November 29, 2022
கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் கடைசி நாளான்று இந்த திரைப்பட விழாவின் தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட் பேசினார். அப்போது பேசிய அவர், “தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் திரைப்படம். இது திரைப்பட விழாவுக்கு ஏற்ற திரைப்படம் இல்லை. இந்த படத்தை பார்த்த நாங்கள் அனைவரும் கலக்கமடைந்தோம், அதிர்ச்சியடைந்தோம். இந்த விழாவில் நாங்கள் உணர்ந்த உணர்வு கலைக்கும், வாழ்க்கைக்கும் இன்றியமையாத ஒரு விமர்சன விவாதத்தையும் உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், இந்த திரைப்படம் திரையிடப்பட்டதற்கு நாங்கள் வெளிப்படையாகவே அதிருப்தியை தெரிவித்து கொள்கிறோம்.” என்றார்.
இதனையடுத்து, தூதுவர் நூர் கிலோனும் ட்விட்டரில் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் இதற்காக நடவ் லாபிட் இடம் ''நீங்கள் வெட்கப்பட வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.
அவதார் 2 வெளியாவதில் சிக்கலா?
Kerala theatres will not screen #Avatar2 as “terms & conditions of screening & revenue sharing are not acceptable to them”! Theatres association #FEUOK says Hollywood distributor is asking for 60% of net,( they can give only 55% ) and compulsory 2 weeks screening! pic.twitter.com/N6WimECqV8
— Sreedhar Pillai (@sri50) November 29, 2022
உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் டிசம்பர் 16ம் தேதி வெளியாகவிருக்கும் அவதார் இரண்டாம் பாகம் கேரளா மாநிலத்தில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் திரையரங்க உரிமையாளர்களின் கூட்டமைப்பு (FEUOK) இப்படத்தை கேரளாவில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இடையே ஏற்பட்டுள்ள கருத்துவேறுபாடு காரணமாக படம் திட்டமிட்டபடி டிசம்பர் 16ம் தேதி கேரளாவில் வெளியாவது குறித்து கேள்வி எழுந்துள்ளது.