Cinema Round-up : கிழிக்கப்பட்ட வாரிசு போஸ்டர்.. அமெரிக்காவில் துணிவு படத்தின் மெகா ப்ரோமோஷன்.. இது சினிமா ரவுண்ட்-அப்..
ஒரு பக்கம் விஜயின் வாரிசு பட போஸ்டர் கிழிக்கப்பட்டுள்ளது மற்றொரு பக்கம், அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் ப்ரோமோஷன் அமெரிக்காவில் நடைபெற்றவுள்ளதாக தகவல் பரவியுள்ளது.
கிழிக்கப்பட்ட வாரிசு போஸ்டர்கள்
வாரிசு படத்தின் ப்ரோமோஷனுக்காக ரயிலில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை மர்ம நபர்கள் கிழித்தெறிந்ததால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
Worst.. 🤦🏾♂️🤷🏾♂️#Varisu #Thunivu pic.twitter.com/yLWuqV3OBX
— VCD (@VCDtweets) December 28, 2022
நேற்று முன்தினம் அனந்தபுரி ரயிலில் ஒட்டப்பட்ட வாரிசு படத்தின் ஸ்டிக்கர் பற்றிய வீடியோ செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்திருந்த நிலையில், அதனை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வாரிசு படக்குழு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
துணிவு படத்தின் மெகா ப்ரோமோஷன்
#Thunivu Mega Promotions planned from 1st Week of Jan in USA.
— Christopher Kanagaraj (@Chrissuccess) December 29, 2022
துணிவு படத்தின் ப்ரோமோஷனுக்காக முன்னதாக துபாயில் ஸ்கை டைவிங் ஸ்டண்ட் நடைப்பெற்றது . அதில், ஸ்கை டைவிங் செய்தவர் துணிவு பட போஸ்டரை வானத்தில் பறக்கவிட்டு மாஸ் காட்டினார். தற்போது, துணிவு படத்தின் மெகா ப்ரோமோஷன்ஸ், அமெரிக்காவில் ஜனவரியின் முதல் வாரத்தில் இருந்து துவங்கும் என்ற தகவல் வந்துள்ளது.
டிடியின் இரண்டாவது திருமணம்
டிடியின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல்கள் பரவிவருகிறது. இது வதந்தியா அல்லது உண்மையா என்பது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.
View this post on Instagram
நீண்ட கால நண்பரும் உதவி இயக்குனருமான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை திருமணம் செய்து கொண்ட டிடி கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து கொண்டார்; அதற்கு பிறகு தனிமையில் தனது பணிகளில் முழு கவனத்தையும் செலுத்தி வந்த டிடி தற்போது இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மணமகன் கேரளாவை சேர்ந்த ஒரு தொழிலதிபராக இருக்க கூடும் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை என்றாலும் டிடி இந்த ஊடக அறிக்கைக்கு எந்த ஒரு மாற்று கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது
பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தேதி
View this post on Instagram
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில், திரிஷா நடிப்பில் டிசம்பர் 30ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் 'ராங்கி'. இந்த படத்தை இயக்குநர் சரவணன் இயக்கியுள்ளார். இப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட திரிஷாவின் புகைப்படங்கள் வைரலாகிவருகிறது . ராங்கி படத்தின் ரிலீஸையொட்டி க்ளிம்ப்ஸ் காட்சி நேற்று வெளியானது.
ராங்கி படத்தின் ரிலீஸையொட்டி க்ளிம்ப்ஸ் காட்சி நேற்று வெளியானது
நேற்றைய மாலை 4 மணிக்கு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய தகவல் வெளியானது. ஆர்வமாக இருந்த ரசிகர்களின் குழப்பத்தை போக்கும் வகையில், பொன்னியின் செல்வன் படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை அதிகாரபூர்வமாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.