ரசிகர்களை ரசிக்கற ஹீரோ.. 3 தலைமுறை ரசிகர்களை கட்டிப்போட்டு இருக்கார்.. புகழ்ந்த பிரபலம்.. அதிர்ந்த அரங்கம்!
”எனக்காக என்னோட குடும்பம், நண்பர்கள் கஷ்டப்பட்டார்கள் என்றால் அது ரத்த சம்பந்தம். ஆனால் எந்தவித தொடர்பும் இல்லாமல் ரசிகர்கள் வைக்கும் அன்பு பெரியது என்று விஜய் சொல்வார்” - நடிகர் சதீஷ்
வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
விழாவுக்கு கிரே நிற சட்டை, வெள்ளை பேண்ட் சகிதம் முன்னதாக அரங்கம் அதிர விஜய் மாஸ் எண்ட்ரி கொடுத்தார். ரசிகர்கள் அருகின் விஜய்யை பார்க்கும் வகையில் தனி பாதை அமைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் நடந்து சென்று விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
ரசிகர்கள் வைக்கும் அன்பு பெருசுன்னு சொல்வார்...
அவர் வரும் போது பின்னணியில் வாரிசு படத்தில் இடம் பெற்ற தீ தளபதி பாடல் ஒலிபரப்பப்பட்டது. விஜய் வருகை தந்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
முன்னதாக இந்த விழாவில் பேசிய நடிகர் சதீஷ், "எனக்காக என்னோட குடும்பம், நண்பர்கள் கஷ்டப்பட்டார்கள் என்றால் அது ரத்த சம்பந்தம். ஆனால் எந்தவித தொடர்பும் இல்லாமல் ரசிகர்கள் வைக்கும் அன்பு பெரியது என்று விஜய் சொல்வார். விஜய் 3 தலைமுறைகளை கட்டிப்போட்டு இருக்கிறார்.
ஹீரோவ ஃபேன்ஸ் ரசிக்கறத பாத்திருப்போம். ஆனா ரசிகர்கள ரசிக்கற ஹீரோ இவர்தான் ” எனப் பேசியதோடு விஜய்யை கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.
Hero Va Fans Rasikaratha Pathruipom But Fans ya Rasikara Hero ivartha @actorvijay - Sathish #VarisuAudioLaunch #Varisu #VarisuAudioFromToday #VarisuMusic #VarisuAudioLanch pic.twitter.com/LeQpAdXkQb
— 🔥போக்கிரி Josh⚡ தளபதி🔥❤ (@Josh_Harshith) December 24, 2022
கண்கலங்கிய தமன்
தொடர்ந்து படத்தின் இசையமைப்பாளர் தமன் உணர்ச்சிப்பெருக்குடன் பேசத்தொடங்கினார். “இது 27 வருட காத்திருப்பு; விஜயின் ரசிகனாக இந்த படம் எனக்கு பெரிய விருது; என் மகன் எனக்கு பெரிய பிரஷர் கொடுத்தான். ஒழுங்காக பாட்டு போடவில்லை என்றால் பள்ளிக்கே செல்ல முடியாது; என்னை நண்பர்கள் அவமானப்படுத்துவார்கள் என்றான்.
அதனால் ட்யூன் போட்ட உடன் அவனிடம் போட்டு காண்பித்தேன். அவன் நல்லாதான் போட்டு இருக்கீங்க என்றான். இசையமைப்பாளர் பார்வையில் சொல்கிறேன். இந்தியாவுக்கு ஆதார் கார்டு எவ்வளவு முக்கியமோ, அப்படி ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் விஜய்க்கு இசை அமைக்க வேண்டும் என்பது முக்கியம்.
நான் இன்று சாப்பிடப் போவதில்லை. அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன். குஸ்தி, அல்லு அர்ஜூன் படத்திற்கு நான் போட்ட இசையை விஜய் போனில் அழைத்து பாராட்டினார். யார் அப்படி செய்வார் சொல்லுங்கள்... நான் வாழ்க்கை முழுவதும் விஜய் ஃபேன்” எனப் பேசி கண்கலங்கினார்.
முன்னதாக விழாவில் நடன இயக்குநர் ஜானி - ராஷ்மிகா இருவரும் இணைந்து ரஞ்சிதமே பாடலுக்கு அரங்கம் அதிர நடனமாடினர்.
”பாடலின் கடைசி 1.20 நிமிடங்களில் ஒரே ஷாட்டில் விஜய் நடனமாடி இருக்கிறார்; அது நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும்” என ஜானி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.