Watch Video : திருஷ்டி சுற்றி போடுங்கப்பா..செல்லக்குட்டியுடன் ஆயுத பூஜை.. இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட வரலட்சுமி!
Varalaxmi Sarathkumar Watch Video : தன் செல்லக்குட்டியுடன் கூலாக ஆயுத பூஜையை நடிகை வரலட்சுமி சரத்குமார் கொண்டாடியுள்ளார்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் அவரது இல்லத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு தனது வாகனத்திற்கு பூஜை செய்துள்ளார்.
9 நாட்கள் கடைபிடிக்கப்படும் நவராத்திரி முடிவு அடைந்த நிலையில், நேற்று ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று விஜய தசமி விழா கடைப்பிடிக்கப்படுகிறது. வழக்கமாக அனைவரது இல்லத்திலும் படிக்கும் புத்தகங்களையும், வண்டி வாகனங்களையும், தொழில் சம்மந்தப்பட்ட கருவிகளையும் சுத்தம் செய்து பூஜை செய்வோம்.
நடிகை வரலட்சுமி அவரது BMW காருக்கு திருஷ்டி சுற்றி போட்ட வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.. அந்த போஸ்டில் “ அனைவருக்கும் அன்பு, வெளிச்சம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்த தசரா வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் கனவுகள் எல்லாம் நினைவாக மாற நான் வேண்டிக்கொள்கிறேன்.” என்று பதிவிட்டிருந்தார்.
View this post on Instagram
இதெல்லாம் செய்தியா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இவர் வெளியிட்ட வீடியோவில் நீங்கள் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அந்த வீடியோவில் தன் நாய் குட்டியை தன் கைகளில் ஏந்திய படியே வரு நிற்கிறார். பொதுவாக பூஜை அறையில் சிலர் செல்லப்பிராணிகளை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் தன் செல்லப்பிராணி மீது அதிகம் வைத்துள்ளவர் வரலட்சுமி. அவர் தன் நாய் குட்டியை அவரின் செல்ல குழந்தையாகவே கருதுகிறார். அதனால் அதையும் குடும்பத்தில் உள்ள ஒரு நபராக அவர் நினைக்கிறார்.
அந்த அழகிய நாய்க்குட்டிக்கு குச்ஜி வரலட்சுமி என்ற பெயர் வைத்து, அதற்கு ஒரு தனி இன்ஸ்டா பக்கத்தையே திறந்து வைத்திருக்கிறார். அதில், நாய் குட்டியை கொஞ்சும் பல வீடியோக்களை அவர் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் தன் உடல் எடையை குறைத்த இவர், ”சபரி” எனும் சைக்காலஜிக்கல் படத்தில் நடித்து வருகிறார். அதுபோக, விடுமுறை நாட்களில் பயணம் செய்வதை இவர் வழக்கமாக வைத்திருக்கிறார்.
மேலும் படிக்க : இன்று புதிய திரைப்படத்தை அறிவிக்கும் ட்ரீம் வாரியர்ஸ்... யார் படம் தெரியுமா?
Raatsasan 2: ராட்சசன் 2 வருகிறது... முதல் பாகம் வெளியான நாளில் அறிவித்தார் விஷ்ணு விஷால்!