Raatsasan 2: ராட்சசன் 2 வருகிறது... முதல் பாகம் வெளியான நாளில் அறிவித்தார் விஷ்ணு விஷால்!
Raatsasan 2: தனது ட்விட்டர் பக்கத்தில் அதை அறிவித்துள்ள அவர் , இரண்டாம் பாகத்திற்கான போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.
விஷ்ணுவிஷால் நடிப்பில் கடந்த 2018 அக்டோபர் 5 ம் தேதி இதே நாளில் வெளியானது ராட்சசன் திரைப்படம். பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியானாலும், வெளியான பின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பரபரப்பான த்ரில்லராக பெரிதும் பேசப்பட்டது. இன்றோடு படம் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், ராட்சசன் 2 திரைப்படம் எப்போது வரும் என பலமுறை விஷ்ணு விஷாலிடம் கேட்கப்பட்டது.
View this post on Instagram
அந்த அளவிற்கு படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அமலாபால், சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இத்திரைப்படத்தை இயக்குனர் ராம்குமார் இயக்கியிருந்தார். ஜி.டில்லிபாபு, ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
குழந்தைகளை கடத்திக் கொள்ளும் ஒரு சைக்கோ கொலையாளியின் இந்த கதையை அடுத்து தான், அதிக அளவில் க்ரைம் த்ரில்லர் படங்கள் தமிழில் வரத்தொடங்கின. அப்படி பார்க்கும் போது, த்ரில்லர் படங்களின் பிதாமகன் என்று கூட, ராட்சசன் படத்தை கூறலாம். பெரிய அலட்டல் இல்லாமல், அதே நேரத்தில் அனைத்து த்ரில்லர் அம்சத்துடன் வெறும் 20 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட ராட்சசன் திரைப்படம், பெரிய வசூல் வேட்டையை நடத்தியது.
#4yearsOfRaatsasan
— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) October 4, 2022
Game changer..
Surprise coming up soon for ya'll.....@dir_ramkumar :) pic.twitter.com/dQMqsWguvo
ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமத்திலும் நல்ல வசூல் பெற்றது. இந்நிலையில், தற்போது க்ரைம் த்ரில்லர் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், மீண்டும் ராட்சசன் திரைப்படத்தை எடுக்க முடிவு செய்த நடிகர் விஷ்ணு விஷால், அதற்கான அறிவிப்பை, ராட்சசன் முதல் பாகம் வெளியான இதே நாளில் அறிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் அதை அறிவித்துள்ள அவர் , இரண்டாம் பாகத்திற்கான போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர்கள் மற்றும் இயக்குனர், இசையமைப்பாளர்களே இந்த பாகத்திலும் தொடர உள்ளனர். கடந்த பாகத்தில் ஹீரோயினாக நடித்த அமலாபால், இந்த பாகத்திலும் தொடர்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையில், அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.