மேலும் அறிய
Advertisement
Big Boss 7 Tamil: 'ஜோவிகா மேல ரொம்ப கோபம் வருது' - டென்ஷனான வனிதா விஜயகுமார்!
"என் பொண்ணுக்கு நல்ல பேர் வேணாம். அர்ச்சனா செய்வது எக்ஸ்ட்ரீம் டிராமா. அதனால் தான் ஜோவிகா பயங்கரமாக கத்துகிறார். விசித்ரா புள்ளைய கிள்ளிவிட்டுட்டு தொட்டிலையும் ஆட்டி விடுகிறார்"
"ஜோவிகா மேல எனக்கு கோவம் இருக்கு. கண்டெண்டுக்காக அவள் இப்படியெல்லாம் பண்ணக் கூடாது” என நடிகை வனிதா விஜயக்குமார் பேசியுள்ளார்.
பிரதீப் ஆண்டனி வெளியேறியதை காரணம் காட்டி பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு இடையே சண்டை வலுத்துள்ளது. பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்தது குறித்து மாயா, பூர்ணிமா, ஐஷூ, ஜோவிகாவிடம் விசித்ரா கோபப்பட, மறுபக்கம் மாயாவின் கேப்டன்ஷிப்க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார் அர்ச்சனா. ஒரு கட்டத்தில் மாயாவுக்கு எதிராக விசித்ரா, அர்ச்சனா ஒன்றிணைந்து பிக்பாஸ் வீட்டையே களேபரமாக்கியுள்ளனர். மாயாவை சூனியக்காரி என அர்ச்சனா திட்ட, அர்ச்சனாவுக்கும் விசித்ராவுக்கும் பிரஷ் தராமல் மாயா பனிஷ்மெண்ட் தர, பிக்பாஸ் வீடு சர்ச்சையில் பற்றி எரிகிறது. இதற்கிடையே ஜோவிகாவுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே வயதை வைத்து வார்த்தைப்போர் முற்றியது.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் சண்டை குறித்து நடிகை வனிதா விஜயகுமார் பேசியுள்ளார். அதில் ”19, 25 என்பது ஒரு நம்பர் தான். நீங்கள் 25 மாதிரி நடந்தால் 19 வயது பொண்ணு அந்த மாதிரி நடப்பாங்க. பிக்பாஸ் வீடு ஒரு டிராமா வீடு தான். அங்கு சூழல் ஒரே மாதிரி இருக்காது. எல்லாமே தெரிந்து தான் உள்ளே சென்றுள்ளனர். போட்டியாளர்கள் செய்வது எல்லாமே கண்டெண்ட். ரெட்கார்டு கொடுத்த அந்த 4 பேர் சொல்றத வச்சுட்டு மட்டும் கமல் சார் பிரதீப்பை வீட்டை விட்டு வெளியே அனுப்பவில்லை. இது மேனேஜ்மெண்ட் முடிவும் கூட. உள்ளே ஏதோ நடந்து இருக்கும். அதன் அடிப்படையில் தான் பிரதீப் எவிக்ஷன் நடந்துள்ளது.
மக்களை தூண்டிவிடுவதற்காகவே பொய்யான ஒரு காரணம் சொல்லி பிரதீப்பை வெளியேற்றியதாக விசித்ரா பேசுகிறார். விசித்ரா பிளான் பண்ணி தான் கேம் விளையாடுகிறார்கள். பிரதீப் வெளியேற்றப்பட்டபோது விசித்ரா கமலிடம் கேட்டு இருக்கலாம். அப்போது ஏன் கேட்கவில்லை. இருந்த வாரம் கண்டெண்ட் வேண்டும் என்பதற்காக தான் விசித்ரா அப்போது கேட்காமல் இருந்து இருக்காங்க.
ஜோவிகா, ஐஷூ மன்னிப்பு கேட்கும்போது அதை அர்ச்சனா ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதை விட்டுட்டு, பிரச்னையை அர்ச்சனா மேலும் அதிகமாக தான் எடுத்துட்டு போனாங்க. மாயா, பூர்ணிமா கூட்டணியும் ஒரு கட்டத்துல பிரியும். சோஷியல் மீடியா ஒரு குப்பை. என் பொண்ணுக்கு நல்ல பேர் வேணாம். அர்ச்சனா செய்வது எக்ஸ்ட்ரீம் டிராமா. அதனால் தான் ஜோவிகா பயங்கரமாக கத்துகிறார். விசித்ரா புள்ளைய கிள்ளிவிட்டுட்டு தொட்டிலையும் ஆட்டி விடுகிறார். அர்ச்சனாவை வைச்சு விசித்ரா விளையாடுகிறார். பிரதீப் இருந்தவரை அர்ச்சனா அழுதுட்டு தான் இருந்தாங்க. அப்போது விசித்ரா கழுவறதுல நழுவர மீன் போல இருந்தார்.
பிரச்னையை ஆரம்பிக்கவே பிரஷ் தரவே இல்லை என்று விசித்ரா கண்டெண்ட் செய்கிறார். விசித்ரா டெண்டுல்கர் அளவுக்கு சூப்பர் கேம் விளையாடுகிறார். நான் விசித்ரா, மாயா மற்றும் கூல் சுரேஷ் ஃபேன். மாயா வில்லாதி வில்லன் போன்ற கேப்டன். எனக்கு ஜோவிகா மேல ரொம்ப கோவம் வருது. கண்டெண்டுக்காக எதுக்கு அர்ச்சனாகிட்ட தேவையில்லாமல் பேசனும். ஜோவிகா பேச்சுவார்த்தையை ரொம்ப வளர்க்காமல் இருக்க வேண்டும். பிக்பாஸ் வீட்டில் எல்லாருமே அடிச்சிட்டு இருக்காங்க. அது பார்க்கும்போது சிரிப்பு தான் வருது” எனப் பேசியுள்ளார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion