Jovika Vijayakumar: த்ரிஷா, நயன்தாரா வரிசையில் ஜோவிகா.. வனிதா விஜயகுமார் நம்பிக்கை!
Vanitha on Jovika: பிக்பாஸில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஜோவிகா இடம்பெற்றுள்ளார். அன் அபிஷியல் வோட்டிங் லிஸ்ட் படி ஜோவிகா குறைவான வாக்குகளைப் பெற்று கடைசியில் இருக்கிறார்.
![Jovika Vijayakumar: த்ரிஷா, நயன்தாரா வரிசையில் ஜோவிகா.. வனிதா விஜயகுமார் நம்பிக்கை! Vanitha opens about jovika game play in bigg boss 7 tamil Jovika Vijayakumar: த்ரிஷா, நயன்தாரா வரிசையில் ஜோவிகா.. வனிதா விஜயகுமார் நம்பிக்கை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/30/ef0fa84ab9d00354c0241e4df6cf603d1701341326574224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் மற்றும் பிரபலமான நடிகை வனிதாவின் மூத்த மகள் ஜோவிகாவும் ஒரு போட்டியாளராக உள்ளார். இந்த நிலையில் வனிதா தன்னுடைய மகள் ஜோவிகா குறித்த கருத்து ஒன்றை சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்ட சீசனுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஒவ்வொரு நாளும் ரீவியூ கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மர்ம நபர் ஒருவரால் வனிதா தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது. மேலும் அது இந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனியின் ரசிகர் என வனிதா தெரிவித்து இருந்தார். இந்த தாக்குதல் குறித்து வனிதா காவல் நிலையத்தில் புகார் எதுவும் பதிவு செய்யவில்லை என்பது குழப்பமாகவே இருந்தது.
பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் வெறித்தனமாக விளையாடி அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்த ஜோவிகாவை பார்த்து சக போட்டியாளர்கள் பலரும் பதுங்கினார்கள். ஒவ்வொரு நாள் ப்ரோமோவிலும் ஜோவிகா நிச்சயம் இடம் பெற்று இருப்பார்.
எக்கச்சக்கமான கன்டென்ட் கொடுத்து வந்த ஜோவிகா, திடீரென இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டார். ஒரு சில சமயங்களில் ஜோவிகா ஏதாவது பேசினால் கூட அது தேவையில்லாததாகவே தோன்றியது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஜோவிகா இடம்பெற்றுள்ளார். அன் அபிஷியல் வோட்டிங் லிஸ்ட் படி ஜோவிகா குறைவான வாக்குகளைப் பெற்று கடைசியில் இருக்கிறார்.
இது குறித்து சமீபத்தில் வனிதா கலந்து கொண்ட நேர்காணலில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வனிதா பதில் அளிக்கையில் "இந்த வாரம் ஜோவிகா வெளியேறினாலும் எனக்கு சந்தோஷம் தான். அவளுக்கு இப்போது 18 வயது தான் ஆகிறது. இன்னும் இண்டஸ்ட்ரியில் அவள் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. ஏற்கெனவே அவ நிறைய பேரோட அன்பை சம்பாதிச்சு இருக்கா.
இப்பவே அவ சம்பாதிச்சுக்கிட்டு தான் இருக்கா. குறைந்தபட்சம் இன்னும் 20 வருஷத்துக்கு அவளால் சம்பாதிக்க முடியும். அவளுக்கு வெளில நிறைய வேலை இருக்கு. எதிர்காலத்தில் த்ரிஷா, நயன்தாரா மாதிரி பெரிய ஆர்டிஸ்டாக வருவதற்கு அவளுக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த ஷோக்காக அவளோட வாழ்க்கையை கெடுத்துக்க முடியாது. அவ அங்க ப்ரெண்ட்ஸோட சந்தோஷமா இருக்காளா அது தான் எனக்கு வேணும்.
மேலும் அவ கொஞ்ச நாளாவே பிக்பாஸ் வீட்டில் சைலண்டா இருக்கிறாள். எனக்கு அடிபட்டது பத்தி அவளுக்கு என்னவோ மனசுல பட்டு இருக்கு. அது தான் அவளோட அமைதிக்கு காரணம். அம்மா - பொண்ணு பாசம்னா இது தான். எனக்கு அடிபட்டது மட்டும் அவளுக்கு தெரிஞ்சு இருந்தா இந்த விளையாட்டும் வேணாம், ஒன்னும் வேணாம் என தூக்கிப் போட்டு வெளியே வந்து இருப்பா” என வனிதா விஜயகுமார் பேசியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)