மற்றொரு ‛வலிமை’ அப்டேட்; ஸ்பெயின் அனுமதிக்கு காத்திருப்பு
ஸ்பெயின் நாட்டு அனுமதிக்கு வலிமை படப்பிடிப்பு காத்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கும் திரைப்படம் வலிமை. கொரோனா காரணமாக படப்பிடிப்பு தாமதமான நிலையில் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் செய்த சேஷ்டைகளை உலகறியும். அதற்கு சமீபத்தில் முற்றுப்புள்ளி வைத்த படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் கிடைத்த இந்த அப்டேட் அஜித் ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மற்றொரு ‛வலிமை’ அப்டேட் கிடைத்துள்ளது.
வலிமை நடத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் ஸ்பெயின் நாட்டில் படமாக்கபட உள்ளதாகவும், அதற்காக அந்நாட்டு அனுமதிக்கு படக்குழு விண்ணப்பித்துள்ளது. இன்னும் ஸ்பெயின் நாட்டு அனுமதி கிடைக்காததால் படக்குழு காத்திருப்பதாக கூறியுள்ள படத்தின் வில்லன் நடிகர் கார்த்திகேயா, அனுமதி கிடைத்ததும் 3 நாட்களில் அப்பணிகள் நிறைவுபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அப்டேட் மூலம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நிறைவு பெற்று வெளியிட தயாராகிவிட்டது வலிமை. உண்மையில் இந்த அப்டேட் அஜித் ரசிகர்களை இன்னும் குதூகலப்படுத்தியுள்ளது.