Valimai:வலிமை திரைப்படத்திற்கு அதிக டிக்கெட் விலை... நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்த கோவை அஜித் ரசிகர்கள் !
நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் வலிமை திரைப்படத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் வலிமை. வலிமை... வலிமை.. அப்டேட்... அப்டேட் என தொடர்ந்து வலிமைக்கான எதிர்பார்ப்பு எகிறிக்கொன்டிருக்கும் நிலையில் கிட்டத்தட்ட ரிலீஸ் தேதியை நெருங்கிவிட்டது படம். இன்னும் 15 நாட்களுக்குள் வலிமை ரிலீஸ் என்பது கிட்டத்தட்ட உறுதிதான். படக்குழு ப்ரோமோஷன் வேலைகளில் பரபரப்பாக இயங்கி வருகிறது. வலிமைப்படத்தின் மேக்கிங் வீடியோ அண்மையில் படக்குழு சார்பில் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் பைக் ஸ்டண்ட் சம்ந்தமான காட்சிகள், கொரோனாவால் படப்பிடிப்பு நிறுத்துப்பட்டது, அஜித் பைக் ஸ்டண்ட் செய்யும் போது கீழே விழுந்து பின்னர் மீண்டும் எழுந்தது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ரசிகர்களிடம் இந்த வீடியோ ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். இந்நிலையில் வலிமை படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன. புத்தாண்டை வரவேற்கும் விதமாக வலிமை படக்குழு ட்ரெய்லர் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கோவையைச் சேர்ந்த அஜிர் ரசிகர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அடுத்த மாதம் 13ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தச் சூழலில் கோவை மாநகராட்சியிலுள்ள சில தியேட்டர் உரிமையாளார்கள் மற்றும் திரைப்பட விநியோக உரிமை பெற்றவர்கள் சேர்ந்து ஜனவரி 12ஆம் தேதி நள்ளிரவரில் திரைப்படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர்.
Viswasam Trailer - 30.12.2018
— LetsOTT GLOBAL (@LetsOTT) December 29, 2021
Valimai Trailer - 30.12.2021
மேலும் அவர்கள் தமிழ்நாடு அரசு நிர்ணயித்த 120 ரூபாய் என்ற கட்டணத்தைவிட மிகவும் அதிகமாக 1000 ரூபாய் வரை டிக்கெட்டை விற்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி தற்போது முதல் முன்பதிவு என்று கூறி சிலரிடம் அந்தத் தொகையையும் வசூலித்து வருகின்றனர். ஆகவே இதுபோன்று நடக்கும் திரையரங்குகள் மற்றும் வலிமை பட விநியோகஸ்தர்கள் ஆகியவர்களை மாவட்ட நிர்வாகம் முறையாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அஜித் ரசிகர் மன்றம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளனர். அவர்கள் இந்த கோரிக்கையை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும் படிக்க: ரிலீஸ் தேதி நெருங்கிட்டு.. நாளைக்கு வலிமை ட்ரெய்லர்.. தீயாய் பரவும் அப்டேட்ஸ்..