மேலும் அறிய
Advertisement
Vaikaipuyal Vadivelu: வைகைப்புயல் வடிவேலுவின் தாயார் மதுரையில் காலமானார்..!
நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலுவின் தாயார் நேற்று மதுரையில் காலமானார்.
நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலுவின் தாயார் நேற்று மதுரையில் காலமானார். நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி என்கின்ற பாப்பா உடல்நலக்குறைவால் நேற்று இரவு மதுரையில் காலமானார். காலமான அவரது தாயாருக்கு வயது 87.
படப்பிடிப்புக்காக பல்வேறு இடங்களில் தங்கி வந்தாலும், தன் சொந்த ஊரான மதுரையில் குடும்பத்தினருடன் நடிகர் வடிவேலு வசித்து வருகிறார். இந்த நிலையில் வயது மூப்பினால் உடல் நலம் பாதித்து இருந்த வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி நேற்று இரவு காலமானார். தனது தாயை இழந்த நடிகர் வடிவேலு பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளார்.
மேலும் அனைவரையும் சிரிக்க வைத்த நடிகர் வடிவேலு சோகத்தில் மூழ்கி காணப்படுவதை யாராலும் பார்க்க முடியவில்லை. திரையுலகினர், நண்பர்கள், அவரது உறவினர்கள் என அனைவரும் நடிகர் வடிவேலுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion