Vadivelu | ’‛என்கூட நடிக்க வந்த நடிகைகளை மிரட்டியிருக்காங்க....’ - வடிவேலு பேசிய சீரியஸ் டாப்பிக்!
சொந்த செலவில் நாயகிகளை தயாரிப்பாளர் அழைத்து வந்தால் , வேறு சிலர் அவர்களது சொந்த செலவில் திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்கள் .
தமிழ் சினிமாவில் தவிர்க முடியாத நகைச்சுவகை கலைஞர் பட்டியலை எடுத்தால் அதில் வைகை புயல் வடிவேலுவிற்கு தனி இடம் உண்டு. இன்று பல மீம்ஸ் கிரியேட்டர் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்த பெருமையும் நவரச நாயகன் வடிவேலுவைத்தான் சேரும் . பல்வேறு பிரச்சனைகள் காரணமாக சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் மூலமாக மீண்டும் கோலிவுட்டிற்கு ரீ- எண்ட்ரி கொடுக்கவுள்ளார். சுராஜ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் வடிவேலு நடித்து வரும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. பூஜை கடந்த டிசம்பர் மாதம் போடப்பட்டது. ஃபஸ்ட்லுக் புகைப்படங்களும் வெளியாகி இணையத்தை கலக்கின. இந்த நிலையில் வடிவேலுவின் சில சுவாரஸ்ய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வடிவேலு நடிப்பில் யுவராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தெனாலிராமன் . இந்த திரைப்படத்தில் மீனாக்ஷி தீக்ஷித் வடிவேலுவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். முன்னதாக வடிவேலுவிற்கு ஜோடியாக நடிக்க பில்லா 2 படத்தில் நடித்த பார்வதி ஓமணக்குட்டனை அணுகியிருக்கிறார்கள் . ஆனால் அவர் வடிவேலுவுக்கு ஜோடியா... அப்படியென்றால் 1.5 கோடி சம்பளம் கொடுங்கள் என கேட்டிருக்கிறார்.இதனால் படக்குழுவினர் வேறு நாயகியை நாடியுள்ளனர்.அதன் பிறகுதான் விஜய்காந்த் நடிப்பில் வெளியான விருதகிரி படத்தில் நாயகியாக நடித்த மீனாக்ஷி தீக்ஷித்தை ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். இது குறித்து பேசிய வடிவேலு “ என்னையும் மீனாட்சி தீக்ஷித்தையும் பார்த்தீங்களா...தக்காளி பழத்துல தார் ஊத்துனா மாதிரியே இருக்கு..இதற்கு முன்னால் 5 நாயகிகளை அழைத்து வந்தோம்..ஆனால் பலர் அதனை கெடுத்துவிட்டார்கள் .நீ வடிவேலு கூட நடிச்சா எந்த ஹீரோவும் உன்னோடு நடிக்க மாட்டோம் என அவர்களை மனமாற்றம் செய்திருக்கிறார்கள் . சொந்த செலவில் நாயகிகளை தயாரிப்பாளர் அழைத்து வந்தால் , வேறு சிலர் அவர்களது சொந்த செலவில் திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்கள் ..எல்லா தடைகளையும் தாண்டி என்னுடன் நடிக்க வந்தவர் மீனாட்சி தீக்ஷித் “ என அவர் குறித்து உயர்வாக பேசியுள்ளார்.
மேலும் பேசிய வடிவேலு” மீனாட்சி தீக்ஷித் இப்போதுதான் எனது உண்மையான முகத்தை பார்க்கிறார், அவருடன் நான் நடித்த சமயங்களில் மேக்கப்புடனே இருந்தேன்...எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கெடுத்து விடுவார்கள் ..எனக்கு நிம்மதியே இல்லை...வாடகை சைக்கிள் எடுத்துட்டு போய் கெடுத்துட்டு வற்றாங்க... கடைசி வரைக்கும் நாயகிக்கு என்னுடைய ஒரிஜினல் முகத்தை காட்டிடாதீங்கடா என படக்குழுவினரிடம் கூறினாராம் வடிவேலு. தெனாலி ராமன் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் , குழந்தைகளுக்கு இன்றளவும் ஃபேவரெட் திரைப்படங்களுள் ஒன்று .